Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 ஜனவரி, 2021

UPI பரிவர்த்தனைகளில் அதிரடி மாற்றம், நீங்கள் கட்டணம் செலுத்த ரெடியா?

UPI பரிவர்த்தனைகளில் அதிரடி மாற்றம், நீங்கள் கட்டணம் செலுத்த ரெடியா?

UPI பரிவர்த்தனைகளில் அதிரடி மாற்றம், நீங்கள் கட்டணம் செலுத்த ரெடியா? NPCI தெளிவுபடுத்தியுள்ளது

UPI பரிவர்த்தனை தொடர்பாக, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India (NPCI)) தெளிவுபடுத்தியுள்ளது. உண்மையில், புத்தாண்டு முதல், யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்று கடந்த சில நாட்களாக ஊடகங்களில் கூறப்பட்டது.

UPI பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. புத்தாண்டு முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று தேசிய கொடுப்பனவு கழகம் தெளிவுபடுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த கூடுதல் கட்டணமும் இன்றி அமேசான் பே (Amazon Pay), கூகுள் பே (Google Pay) மற்றும் ஃபோன் பே (Phone Pay) ஆகியவற்றில் முன்பு போலவே கட்டணம் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய முடியும். 

யுபிஐ மூலம் கட்டணம் செலுத்த உங்களுக்கு பணம் செலவாகாது (No charge on UPI payment)

புத்தாண்டு முதல், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்று கடந்த சில நாட்களாக உலா வந்த செய்திகள் வதந்திகளே என்று NPCI தெளிவுபடுத்தியுள்ளது.   புத்தாண்டு முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று சொல்வது தவறு, தேவையில்லாமல் புரளிகளை கிளப்பி விட்டு, வாடிக்கையாளர்களின் கவலையை அதிகரிக்க வேண்டாம் என NPCI அனைவருக்கும் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து பயனர்களும் யுபிஐ (UPI) மூலம் பண பரிவர்த்தனைகளை முன்பு போலவே தொடரலாம் என்று தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.

 

முன்பு போல பரிவர்த்தனை (Transaction as before)

அமேசான் பே, கூகுள் பே மற்றும் ஃபோன் பே ஆகியவை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அனைவரின் கவலைகளும் அதிகரித்தது. முன்பு போலவே ரொக்க பரிவர்த்தனைகளுக்கு மாறிவிடலாமா என்ற விவாதங்களும் தொடங்கின. 2021 முதல் ஜனவரி 1 முதல், மூன்றாம் தரப்பு செயலி சேவை நிறுவனங்கள் கட்டணம் செலுத்தவேண்டும் என NPCI தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது அது உண்மை இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, பரிவர்த்தனைகளுக்கு UPI-ஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஆறுதல் தரும் செய்தி இது.

யுபிஐ (UPI) என்றால் என்ன?

ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payment Interface (UPI)) நேரடியாக கட்டணம் செலுத்தும் அமைப்பு. ஒரு மொபைல் தளம் மூலம் உடனடியாக வங்கிக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள Unified Payment Interface (UPI) வசதியாக இருக்கிறது. இதன் மூலம், ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மொபைல் எண்ணை வைத்தே பணத்தை செலுத்த முடியும். Unified Payment Interface (UPI) மூலம் பல செயலிகளுடன் வங்கி கணக்கை இணைக்க முடியும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக