Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஜூலை, 2020

9-ம் வீட்டில் ராகு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

கிரகங்களில் ராகுபகவான் யோகக்காரகனாவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்வார்.

சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்டபோது தேவனாக உருமாறி சூரியனுக்கும், மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தான்.

மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும், மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே, தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு, தலை வேறாகி விழுந்தான். பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் செய்து கிரக நிலையை அடைந்தான்.

லக்னத்திற்கு 9-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு ராஜ யோகம் கிடைக்கும்.

9ல் ராகு இருந்தால் என்ன பலன்?

👉 பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் குறைவு.

👉 நினைவுத்திறன் அதிகம் உடையவர்கள்.

👉 விவாதங்களில் வெற்றி அடையக்கூடியவர்கள்.

👉 குடும்ப உறுப்பினர்களின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

👉 தந்தை வழி உறவுகளால் ஆதரவின்மை ஏற்படும்.

👉 பிற மொழிகளின் மீது ஆர்வம் அதிகம் இருக்கும்.

👉 வெளிநாட்டு தொடர்புகள் உடையவர்கள்.

👉 மத பற்று அதிகம் கொண்டவர்கள்.

👉 மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

👉 புதுவிதமான பழக்க வழக்கங்களை கொண்டவர்கள்.

👉 பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளை உடையவர்கள்.

👉 தந்தை, ஜாதகருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக