Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஜூலை, 2020

இதில் நீங்கள் யார்?... என்ன வித்தியாசம்? படிக்கலாம்... சிரிக்கலாம் வாங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------------------
படிக்கலாம்... சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------------------------------------
ராமு : புறாக்கிட்டையும், அணில்கிட்டையும் லெட்டரை கொடுத்து அனுப்புனா எது சரியா கொண்டு போயி கொடுக்கும்?
சீனு : தெரியலையே...
ராமு : அணில்தான் சரியா கொண்டு போகும்... ஏன்னா அதுக்கு தான் பின்கோடு இருக்கே...
சீனு : 😃😃
-------------------------------------------------------------------
அருண் : ஆறும்... ஆறும் சேர்ந்தா என்ன வரும்?
குமார் : 66, 12, 36 வரும்...
அருண் : இல்ல... வெள்ளம்தான் வரும்...
குமார் : 😁😁
-------------------------------------------------------------------
தீபக் : ஒரு கடி ஜோக் சொல்லட்டுமா?
ராஜா : ம்ம்ம்... சொல்லு...
தீபக் : கடி ஜோக்...
ராஜா : 😠😠
-------------------------------------------------------------------
இதில் நீங்கள் யார்?
-------------------------------------------------------------------
👉 தோல்வி என்பதனால் வீழ்ந்து கிடப்பவன் தோற்றவன் ஆகிறான்...

👉 தோல்வி வந்தபின் தெளிந்து நிற்பவன் கற்றவனாகிறான்...

👉 தோல்வி அடைந்ததும் எழுந்து நிற்பவன் வென்றவனாகி விடுகிறான்...
என்ன வித்தியாசம்?
சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசியில காச கரியாக்குவாங்க...!!

நெய்வேலில கரிய காசாக்குவாங்க...!!

-------------------------------------------------------------------
ஹா... ஹா... இது எப்படி இருக்கு?
-------------------------------------------------------------------
வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துன்பம் வரலாம்.
ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோங்க...
.
.
.
1 1 1 1 1 1 1 1 1 1...
தெரிஞ்சுகிட்டிங்களா?😬😬
-------------------------------------------------------------------
டீக்கடைக்காரர் கபடி விளையாடினால், எப்படி விளையாடுவார்?
.
.
.
கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ , கப் டீ...😝😝

ஒரு இங்கிலீஷ் தெரிஞ்ச மாடு தியேட்டர் பக்கம் போயி அங்க இருந்த கதவை கடிச்சுதாம்... ஏன் தெரியுமா?
.
.
.
ஏன்னா கதவுல Pull-னு எழுதியிருந்துச்சாமா...😂😂

எலி எப்போ யானையாகும் தெரியுமா?
.
.
.
பேன்ட் போட்டா எலிபேன்ட் ஆகிடும்.😝😝

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக