Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஜூலை, 2020

சிவனின் ஐந்து சபைகள்

ஐந்து சபைகள் என்பவை இறைவனான சிவபெருமான் நடனமாடி சிறப்பித்த ஐந்து இடங்களாகும். 

இச்சபைகள் ஐம்பெரும் சபைகள் என்று அழைக்கப்படுகிறது

பொற்சபை, வெள்ளி சபை, இரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவையே இந்த ஐந்து சபைகள்.

இவைகள் முறையே சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் அமையப் பெற்றுள்ளன.

மார்கழி திருவாதிரை திருவிழா மற்றும் ஆனி திருமஞ்சனம் ஆகிய நாட்கள் ஆடலரசனுக்கு முக்கிய திருவிழா நாட்கள் ஆகும். 

பொற்சபை – திருமூலட்டநாதர் திருக்கோயில், சிதம்பரம்

வெள்ளி சபை  - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை

இரத்தின சபை – வடராண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு

தாமிர சபை – நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி

சித்திர சபை – குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக