வால்ட் டிஸ்னி &கோ எனும் பிரபல
ஊடக நிறுவனம் தனது அவதார்- 2, முலான் மற்றும் ஸ்டார் வார்ஸ் ஆகிய
மூன்று படங்களை திரையிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள்
உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இந்தியா முழுவதும்
திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளன. இந்நிலையில் வால்ட் டிஸ்னி
அண்ட் கோ எனும் பெரிய தயாரிப்பு மற்றும் ஊடக நிறுவனம் தனது முலான், அவதார் -2
மற்றும் ஸ்டார் வார்ஸ் ஆகிய மூன்று படங்களையும் ஒத்திவைத்துள்ளது. அவதார்-2 022
கோடை காலத்திலும், ஸ்டார் வார்ஸ் 2023 கோடை காலத்திலும் வெளியாகும் என
கூறப்பட்டுள்ளது.
ஆனால், முலான் திரைப்படம்
காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த முழு திரைப்படம் மார்ச் மாதம்
திரையரங்குகளுக்கு வர இருந்தது, இதனை ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், கொரோனா தாக்கத்தால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டதால் பலமுறை
வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, தற்பொழுது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய ஒரு டிஸ்னி அமைப்பின் பிரதிநிதி உலக சுகாதார காலகட்டங்களை
நெருக்கடியில் இருக்கும் பொழுது நாம் எப்படி இவற்றை திரையிட முடியும் என
கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக