டெல் நிறுவனம் இந்தியாவில் டெல்
ஏலியன்வேர் எம்15 ஆர்3,டெல் ஜி5 எஸ்இ, டெல் ஜி15, டெல் ஜி3 15 லேப்டாப் மாடல்களை
அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனங்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன்
சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனங்களின் விலை மற்றும்
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
டெல்
ஜி5 15 எஸ்இ கேமிங் லேப்டாப் அம்சங்கள்.
டெல் ஜி5 15 எஸ்இ கேமிங் லேப்டாப் ஆனது
15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2160 x 1080
பிக்சல் திர்மானம் மற்றும் 60ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 22nits
பிரைட்நஸ் வசதியை கொண்டுள்ளதுஇந்த சாதனம். மேலும் இந்த கேமிங் லேப்டாப் மாடலில் AMD
Ryzen 4000 H-series மொபைல் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஏஎம்டி Radeon
RX 5600M கார்ட், 8ஜிபி ரேம், 512ஜிபி M.2 SSD சேமிப்பு வசதி உள்ளிட்ட ஆதரவுகள்
இவற்றுள் அடக்கம். குறிப்பாக 51வாட் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
லேப்டாப் மாடல்.
டெல்
ஜி5 15 லேப்டாப் அம்சங்கள்
டெல் ஜி5 15 சாதனம் ஆனது 15.6-இன்ச்
முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 300nits பிரைட்நஸ் வசதி
மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த
லேப்டாப் மாடல் என்விடியா ஜியிபோர்ஸ் 1650 டி கிராபிக்ஸ் கார்டுடன் 10 வது தலைமுறை
இன்டெல் கோர் ஐ7 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் 8 ஜிபி ரேம்
மற்றும் 512 ஜிபி பிசிஐ எம் 2 எஸ்எஸ்டி சேமிப்பகத்துடன் வெளிவந்துள்ளது. இந்த
சாதனம் சிறந்த வெப்ப மேலாண்மைக்கு இரட்டை-விசிறி குளிரூட்டும் தொழில்நுட்பத்துடன்
வருகிறது.
டெல்
ஜி3 15 லேப்டாப் அம்சங்கள்
டெல் ஜி3 15 லேப்டாப் ஆனது 15.6-இன்ச்
முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2160 x 1080 பிக்சல்
திர்மானம் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 22nits பிரைட்நஸ் வசதியை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் என்விடியா ஜியிபோர்ஸ்
1650டி கிராபிக்ஸ் கார்டுடன் 10வது தலைமுறை இன்டெல் கோர் ஐ7 செயலி மூலம்
இயக்கப்படுகிறது. பின்பு டெல் ஜி3 15 லேப்டாப் மாடலில் 16 ஜிபி ரேம் மற்றும் 512
ஜிபி பிசிஐஇ எம் 2 எஸ்எஸ்டி சேமிப்பு விருப்பம் அல்லது 256 ஜிபி பிசிஐஇ 1TB 5400
RPM HDD விருப்பமும்உள்ளது. குறிப்பாக 51வாட் பேட்டரி ஆதரவுடன் இந்த சாதனம்
வெளிவந்துள்ளது.
டெல்
ஏலியன்வேர் எம்15 ஆர்3
டெல் ஏலியன்வேர் எம்15 ஆர்3 மாடல்
15.6-இன்ச் யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 300 ஹெர்ட்ஸ்
புதுப்பிப்பு வீதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் சமீபத்திய 10 வது தலைமுறை இன்டெல் கோர் ஐ
9 செயலி மற்றும் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர் மற்றும்
மேக்ஸ்-கியூ வடிவமைப்புடன் இயக்கப்படுகிறது மேலும் இந்த மாடலில் 32GB of DDR4 ரேம்
வசதி மற்றும் 1டிபி சேமிப்பு வசதியும் உள்ளது. பின்பு 86வாட் பேட்டரி ஆதரவைக்
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.
டெல் ஏலியன்வேர் எம்15 ஆர்3 லேப்டாப்
மாடலின் விலை ரூ.1,99,990-ஆக உள்ளது.
டெல் ஜி5 15 எஸ்இ லேப்டாப் மாடலின்
விலை ரூ.74,990-ஆக உள்ளது.
டெல் ஜி5 15 லேப்டாப் மாடலின் விலை
ரூ.82,590-ஆக உள்ளது.
டெல் ஜி3 15 லேப்டாப் மாடலின் விலை
ரூ.73,990-ஆக உள்ளது.
குறிப்பாக அமேசான் மற்றும்
பிளிப்கார்ட் தளங்களில் இந்த சாதனங்கள் விற்பனைக்கு வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக