இந்திய பேமெண்ட்ஸ் சந்தையில் முக்கிய இடத்தை இடத்தைப் பிடித்துள்ள பேடிஎம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஏற்கனவே மியூச்சுவல் பண்ட் மற்றும் இன்சூரன்ஸ் விற்பனையைத் துவங்கி தனது காலடியை நிதியியல் சேவை துறைக்குள் வைத்த நிலையில், தற்போது அடுத்தகட்டத்தை நோக்கிய பயணிக்க முடிவு செய்துள்ளது.
பேடிஎம் நிறுவனத்தின் நிதியியல் சேவை பிரிவில் புதிதாக stock broking சேவையை அடுத்த சில வாரங்களில் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் பல stock broking சேவை நிறுவனங்கள் மத்தியில் புதிய போட்டி உருவாக்க உள்ளது.
விஜய் சேகர் சர்மா
பேமெண்ட்ஸ் தான் பேடிஎம் நிறுவனத்தின் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் தளமாக உள்ளது. இதை மையப்படுத்தி வரும் அனைத்து வர்த்தகத்தையும் சேவைகளை உருவாக்கிய பின்பு ஈகாமர்ஸ் துறைக்குள் நுழைந்தோம். இந்நிலையில் அடுத்தகட்ட வளர்ச்சி திட்டமாக நிதியியல் சேவை பிரிவில் மியூச்சுவல் பண்ட் மற்றும் இன்சூரன்ஸ் விற்பனையைத் துவங்கிய நிலையில் விரைவில் கடன் சேவையும் அளிக்கத் திட்டமிட்டு வருகிறோம்.
அனைத்துப் பிரிவு வர்த்தகத்திலும் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில் பேடிஎம் அடுத்த சில வாரத்தில் புதிய பங்கு வர்த்தகத் தளத்தை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது என இந்நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் சர்மா குளோபல் பின்டெக் பெஸ்டிவெல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
ஒப்புதல்
பங்கு வர்த்தகத் தளத்தை உருவாக்கவும், அறிமுகம் செய்யவும் பேடிஎம் நிறுவனத்திற்கு ஜனவரி 2020ல் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாகச் செபி ஒப்புதல் கொடுத்தது.
இதன் வாயிலாகத் தான் தற்போது பேடிஎம் புதிய பங்கு வர்த்தகத் தளத்தை அடுத்த 2 முதல் 3 வாரத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
முக்கியத் திட்டங்கள்
இப்புதிய பேடிஎம் பங்கு வர்த்தகத் தளத்தில் பங்கு வர்த்தகம், நாணய வர்த்தகம், ஈடிஎப், derivatives உடன் பல வர்த்தகத் திட்டங்களை மக்களின் சேவைக்காக அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது பேடிஎம்.
இப்புதிய பங்கு வர்த்தகத் தளம் பேடிஎம் நிறுவனத்தின் பேடிஎம் வெல்த் பிரிவின் கீழ் வர உள்ளதாகத் தெரிகிறது.
போட்டியாளர்
இப்புதிய பங்கு வர்த்தகத் தளத்தின் அறிமுகத்தின் மூலம் பேடிஎம் தற்போது Zerodha உடன் நேரடியாகப் போட்டிப்போடத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. Zerodha இந்திய பங்கு வர்த்தகச் சந்தையில் 15 சதவீத வாடிக்கையாளர்களைத் தன்வசம் வைத்துள்ளதாகக் கூறுகிறது. இந்நிறுவனத்தில் கிட்டதட்ட 28 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக