இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
அறிகுறிகள்:-
மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட
அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.
1. தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது
போன்ற உணர்வு
2. சோர்வு
3. வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
4. தோல் வெளுத்துக் காணப்படுதல்.
மேற்கண்ட நிலையில் நாம் செய்ய வேண்டிய
முதலுதவி:-
மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க
நிலையை உணரும் போது
1. அவர் முன்புறமாக சாய வேண்டும்
2. தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே
சாய்த்துக் கொள்ள வேண்டும். தலையானது இதயப் பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை
பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும்
போது
1. ஆபத்தில் இருப்பவரை பாதுகாப்பான
இடத்திற்கு இடம் மாற்ற வேண்டும்.
2. பாதிக்கப்பட்டவர் சுவாசிக்கின்றாரா
என நெஞ்சில் கை வைத்தோ, மூக்கின் துவாரத்தில் செவி அல்லது உள்ளங்கையில்
பின்புறத்தை வைத்தோ உறுதி செய்ய வேண்டும்.
3. நினைவிழந்த நபரை சரிசமமான தரையில்
அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை
நிமிர்த்த வேண்டும். இது அவரின் சுவாசப்பாதையை எந்தவொரு தடையும் இல்லாமல்
சீராக்கும்.
4. இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட
வேண்டும். (ஒருவேளை வேடிக்கை பார்க்க சிலர் சூழ நின்றால் கூட்டத்தை விலக்க
வேண்டும்).
5. குளிர்ந்த ஈரமான துணிகளை முகம்
மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.
6. இவ்வாறெல்லாம் செய்த பிறகும் கூட
சுவாசம் சீராக இல்லை என்றால், அந்த நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை
அவரது வாயின் மீது வைத்து ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊத
அல்லது உள்செலுத்த வேண்டும்.
7. இவ்வாறு செய்த பிறகும் கூட
நாடித்துடிப்பு இல்லை என்றால் இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அது
இருதயத்தை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். (ஆனால் இதனை செய்ய
அனுபவம் கொஞ்சம் தேவை. இதனை செய்யத் தெரியாவிட்டால் உடனே மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லுதல் நலம்)
8. இருதயத்தை செயல் பட வைக்க ஏற்கனவே
சொன்ன படி, விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum)
இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30
முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும். ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு
விரல்களால் 5 முறையும் 1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினால் 30 முறையும்
அழுத்த வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக
பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப்
பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை
உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம்
அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக