Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 9 ஜூலை, 2019

பாண்டி ஆட்டம்

Image result for பாண்டி ஆட்டம்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 இன்றைய காலங்களில் குழந்தைகள் விளையாட்டிற்கு செலவிடும் நேரம் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த நவீன மயமான காலத்தில் குழந்தைகளுக்கு படிப்பு என்பது மிகவும் அவசியம்தான். அதே சமயம் குழந்தைகள் விளையாட்டிலும் ஆர்வமாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம் ஆகும். தற்போது இருக்கும் குழந்தைகளுக்கு விளையாட்டுகள் என்னவென்று தெரியாமல் கூட வீட்டிற்குள் அடைந்து இருக்கின்றன.

 ஆனால் கிராமப்புறங்களில் விளையாடும் பழைய விளையாட்டுக்களை குழந்தைகள் மறந்து விட்டனர். குழந்தைகள் சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விளையாட்டு என்பது அவசியமாக இருக்கிறது.

 குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி அளித்து சோம்பலைத் தவிர்த்து விளையாடும் பண்டைய விளையாட்டுகளில் ஒன்று தான் பாண்டி ஆட்டம் ஆகும்.

எத்தனை பேர் விளையாடலாம்?

 இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் விளையாடலாம்.

விளையாட தேவையானது :

 சிப்பி அல்லது ஓடு.

எப்படி விளையாடுவது?

 பாண்டி ஆட்டம் என்பது சிறுவர், சிறுமியர் விளையாடும் ஒரு விளையாட்டு ஆகும். மண்தரையாக இருந்தால் இந்த விளையாட்டு விளையாடுவதற்கு நன்றாக இருக்கும்.

இந்த விளையாட்டை விளையாடுவதற்கு எட்டு அல்லது பத்து கட்டங்களைப் போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு சிப்பி ஒன்றை விளையாடும் நபர் கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 முதலில் சிப்பியை ஒன்றாவது கட்டத்தில் போட்டு விட்டு அவற்றை எட்டு அல்லது பத்து கட்டங்களுக்கும் நொண்டி அடித்து செல்ல வேண்டும். பிறகு மறுபடியும் மீண்டும் எட்டாவது கட்டத்தில் இருந்து நொண்டி அடித்தவாறு இரண்டாவது கட்டத்தில் நின்றுக் கொண்டு ஒன்றாவது கட்டத்தில் இருக்கும் சிப்பியை எடுக்க வேண்டும்.

 பின்பு இதே மாதிரி இரண்டு, மூன்று நான்கு என ஒவ்வொரு கட்டமாக சிப்பியை போட்டு இதை போன்று விளையாட வேண்டும். இவ்வாறு விளையாடி முடித்த பிறகு சிப்பியை எட்டாம் கட்டத்தை தாண்டி போட வேண்டும். நொண்டி அடித்தவாறு ஒவ்வொரு கட்டமாக சென்று, காலால் எற்றித்தள்ளி சிப்பியை மிதிக்க வேண்டும்.

 எட்டு கட்டங்கள் முடிந்த பிறகு ஆட்டம் கொஞ்சம் கடினமாக இருக்கும். சிப்பியை தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வைத்து கண்களை மூடிக்கொண்டு ரைட்டா, ரைட்டா என்று கேட்டவாரே கோடுகளை மிதிக்காமல் செல்ல வேண்டும். கடைசியில் தலைக்கு மேல் கையை கொண்டு சிப்பியை வீசும் போது 'வெயிலா, மழையா (அல்லது) யானையா, பூனையா" என்று பாடிக் கொண்டு சிப்பியை வீச வேண்டும்.

 இதை எல்லாம் விளையாடி முடித்தால் எட்டு கட்டங்களில் ஒரு கட்டம் அவர்களுக்கு சொந்தமாகும். விளையாடும் போது அதில் அவர்கள் காலை ஊன்றிக்கொள்ளலாம். மற்றவர்கள் அதை தாண்டி தான் செல்ல வேண்டும்.

விதிமுறைகள் :

 சிப்பி கட்டம் தவறி விழக்கூடாது.

பயன்கள் :

 இழப்பில் ஈடுகட்டும் ஆற்றலைத் தரும்.

 தன்னம்பிக்கையைத் தரும்.

உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக