நன்றாக சிந்தித்து அதன்பின் சாமர்த்தியமாக முடிவெடுக்கும் மிதுன ராசி அன்பர்களே!!
புதுமையான சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். செய்யும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
மாணவர்கள் :
அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகளும், உதவிகளும் கிடைக்கும். உயர்நிலை கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.
ஆரோக்கியம் :
ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களின் மூலம் உதவிகரமான சூழ்நிலைகள் ஏற்படும். பதற்றத்தையும், கோபத்தையும் தவிர்ப்பதன் மூலம் தலைவலி மற்றும் இடுப்பு வலி தொடர்பான பிரச்சனைகளை குறைக்க இயலும்.
திருமண வாழ்க்கை :
தம்பதியர்களுக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அன்யோன்யத்தில் குறைவுகள் இருக்காது. வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும்.
உத்தியோகஸ்தர்கள் :
உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப அங்கீகாரங்கள் கிடைக்கும். சில நேரங்களில் கடினமான உழைப்பிற்கு தகுந்த மரியாதை காலதாமதமாகவே கிடைக்கப் பெறுவீர்கள்.
வியாபாரிகள் :
வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் அபிவிருத்திக்கான எண்ணங்களும், அதற்கான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பங்குதாரர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற மோதலை தவிர்க்க இயலும்.
அரசியல்வாதிகள் :
அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவித அனுபவங்களும், பலதரப்பட்ட தொடர்புகளும் உண்டாகும். மத்திய மற்றும் மாநிலம் தொடர்பான உதவிகள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.
கலைஞர்கள் :
கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் உதவிகள் மூலம் மேன்மையும், எதிர்பாராத தனவரவுகளும் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
நன்மைகள் :
குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவதுடன், வாழ்க்கை பற்றிய புரிதலுடன் முன்னேற்றத்தை அமைத்து கொள்ளக்கூடிய மிதுன ராசி அன்பர்களுக்கு நித்ரா குழுமத்தின் நல்வாழ்த்துக்கள்.
கவனம் :
தொழில் சார்ந்த செயல்பாடுகளில், புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனையின்றி அதிக முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமி வழிபாடு செய்து வர பூர்வீக மற்றும் புத்திரப்பாக்கியம் தொடர்பான இன்னல்கள் அகலும்.
குறிப்பு :
இங்கு கூறப்பட்டுள்ள நன்மைகள் மற்றும் தீய பலன்கள் யாவும் அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்ப நடைபெறும்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக