Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 டிசம்பர், 2020

2021.. ஆங்கில வருட ராசிபலன்கள் - பாகம் 06

நிதானத்துடன் செயல்பட்டு வெற்றி காணும் மகர ராசி அன்பர்களே..!!

மனதில் எண்ணிய செயலை மாறுபட்ட அணுகுமுறையினால் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் ஆதரவான பலன்கள் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வித்தியாசமான எண்ணங்களின் மூலம் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

 

உடல் ஆரோக்கியம் :

உடலில் ஏற்பட்டிருந்த அலர்ஜி தொடர்பான பிரச்சனைகள் குறையும். சோர்வும், களைப்பும் படிப்படியாக குறைந்து புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவ்வப்போது வயிற்றுக்கோளாறு மற்றும் நீரிழிவு நோய்களால் இன்னல்கள் உண்டாகும்.

 

திருமணம் :

எதிர்பார்த்த இடத்தில் வரன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். திருமணமான தம்பதிகளுக்கு சுபகாரியம் தொடர்பான செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் வகையில் மகிழ்ச்சியும், உதவிகளும் கிடைக்கும். கணவன்-மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும்.

 

மாணவர்கள் :

அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலையும், பாராட்டுகளும் கிடைக்கும். அறிவியல் சார்ந்த புதிய முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இருந்துவந்த தடுமாற்றங்கள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள்.

 

உத்தியோகஸ்தர்கள் :

உத்தியோகம் தொடர்பான பணிகளில் கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்களால் நட்பு வட்டம் விரிவடையும். பணி தொடர்பான ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது.

 

வியாபாரிகள் :

சந்தையின் நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடுகளையும், சீர்திருத்தங்களையும் செய்வது நல்லது. கமிஷன் அடிப்படையிலான தொழிலில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

 

அரசியல்வாதிகள் :

அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் மதம் சார்ந்த செயல்பாடுகளில் கருத்து தெரிவிப்பதற்கு முன் சற்று சிந்தித்து செயல்படுதல் அவசியம் ஆகும். அவ்வப்போது உங்களின் மீது அவப்பெயர் ஏற்பட்டு மறையும்.

 

கலைஞர்கள் :

கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளில் கோபமும், ஈகோ இன்றி செயல்படுவதன் மூலம் லாபத்தை அடைய இயலும்.

 

நன்மை :

மனதில் புத்துணர்ச்சியான எண்ணங்களும், உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் முன்னேற்றமான வாழ்க்கையையும், புதுவிதமான பாதையையும் அமைத்துக் கொள்ள இருக்கக்கூடிய மகர ராசி அன்பர்களுக்கு நித்ரா குழுமத்தின் நல்வாழ்த்துக்கள்.

 

கவனம் :

புதிய முயற்சிகளில் ஈடுபடக்கூடியவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளும், எதிர்பார்த்திருந்த உதவிகளும் காலதாமதமாக கிடைக்கும். ஆகவே, பொறுமையுடன் சிந்தித்து செயல்பட்டால் எண்ணிய இலக்கை அடைய இயலும்.

 

வழிபாடு :

சனிக்கிழமைதோறும் சனிபகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி நீல நிற பூக்களால் வழிபாடு செய்து வர காரிய வெற்றி ஏற்படும்.

 

குறிப்பு :

இங்கு கூறப்பட்டுள்ள நன்மைகள் மற்றும் தீய பலன்கள் யாவும் அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்ப நடைபெறும்.



 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக