பல்லாங்குழி என்ற விளையாட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் பொழுதுபோக்கிற்காக விளையாண்டு வந்த ஒரு பழமையான விளையாட்டு, இன்று பொழுதுபோக்கிற்கு நிறைய வந்து விட்டதால் அவைகள் மறந்து போய் விட்டன. நாளடைவில் மறைந்து போகவும் வாய்ப்புண்டு, இம்மாதிரி விளையாட்டுகளில் இருக்கும் பெண்ணிய நுண்ணரசியலை மாற்று கோணத்தில் ஆராயவே இந்த முயற்சி.
பல்லாங்குழி விளையாட்டை பற்றி நேராக ஆராய்ச்சிக்கு போவோம்.
இந்த விளையாட்டு பெண்களுக்கு வியாபார தந்திரம் ஆண்களுக்கு சமமாக இருக்கிறது என்று நிருபிக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டில் உடல் உழைப்புக்கு பெரிதாக வேலையில்லை, ஆனால் மூளைக்கு உண்டு, எங்கே ஆரம்பிக்க வேண்டும் என்று ஆரம்பித்திலிருந்து முடிவு வரை, தீர்க்கமாக எடுக்கும் முடிவுகளுக்கே வெற்றி,
இந்த விளையாட்டில் அதிர்ஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்பது போல் எந்த தொழிலும் அனுபவத்தாலேயே வெற்றியை அடைய முடியும், அனுபத்தில் மட்டுமே நாம் எடுக்கும் முடிவுகளில் முதிர்ச்சி தெரியும். இந்த விளையாட்டு மூலம் பெண்களும் தங்களாலும் ஆண்களுக்கு நிகராக எல்லா தொழில்களிலும் பிரகாசிக்க முடியும் என்று நிரூபிக்கிறார்கள், இன்று ஆண்களை விட பெண்களே குடும்ப பொறுப்புகளை சீராக நடத்துகிறார்கள், அது ஒரு பெரிய குழுமத்தை வழி நடத்துவதை விட கடினமானது.
தாயம்
தாயம் என்ற விளையாட்டு பெண்கள் மட்டும் விளையாடும் விளையாட்டல்ல என்று மகாபாரதம் என்ற சரித்திர புனைவின் மூலம் தெரிகிறது, இந்த விளையாட்டு இன்னும் கிராம புறங்களில் விளையாடப்பட்டு வருகிறது பெண்களால்.
தாயக்கட்டைகள் என்று சொல்லப்படும் நீண்ட கனசெவ்வக உலோகத்தில் நான்கு பக்கங்கள் மையப்படுத்த பட்டிருக்கும், ஒரு பக்கம் மட்டும் எந்த குறிகளும் இல்லாமல் மற்ற பக்கங்களில் முறையே ஒன்று, இரண்டு, மூன்று என்று குறிகள் இருக்கும், அந்த இரண்டு கட்டைகளையும் சேர்ந்து உருட்டும் பொது கிடைக்கும் எண்களை பொறுத்து அவர்களின் ஆட்டம் இருக்கும்.
அந்த கட்டைகள் நம் கையில் இருக்கும் வரை மட்டும் தான் நமது நிலைப்பாடு, இதை கீழே உருட்டியவுடன் வரும் எண்கள் நமக்கு வாழ்வின் சாத்திய பாடுகளை சொல்லி தருகிறது, பெண்கள் அதிர்ஷ்டம் என்ற சொல்லை நம்பி இருக்க வேண்டும் என்று ஆண்களால் திணிக்க பட்ட விளையாட்டாக இது இருக்கலாம் என்று நினைக்கிறேன்,
ஏனென்றால் முயற்சிகளில் வெற்றியை விட தோல்விகளே இதில் அதிகம் கிடைக்கும்,
காரணம் இந்த விளையாட்டில் தாயம்(ஒன்று),ஐந்து,ஆறு,பன்னிரெண்டு என்ற எண்களுக்கு மட்டுமே இதில் தொடர் ஆட வாய்ப்பு, இரண்டு ,மூன்று,நான்கு என்ற எண்கள் வந்தால் நம் சுற்று முடிந்து அடுத்தவர் வாசம் ஆட்டம் போய் விடும், இதில் தொடர் ஆட்ட காரணிகளே நிறைய இருப்பது போல் தோன்றினாலும் சாத்தியப்பாடுகள் முடிவுறு காரணிகளுக்கே அதிகம்,
இருப்பினும் தன்னிடம் இருக்கும் காய்களை நகர்த்தி முடிவுக்கு செல்வதில் எடுக்கும் முயற்சிகள் அவர்களுடைய தலைமை பண்புகளை மேலும் நமக்கு உணர்த்துகிறது,
உண்மையில் நாம் உணர வேண்டியது என்னவென்றால் எந்த சூழ்நிலையிலும் பெண்களும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும் என்பதே.
மதியம் சாப்பிட வீட்டிற்கு செல்லும் பொழுது என் அன்னையும் அண்டை வீட்டாரும் தாயம் விளையாடி கொண்டிருந்தார், விளையாடி விட்டு வர நேரமானதால் வந்த ஆராய்ச்சி இது
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக