Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

7-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் என்ன ராசி? என்று கணிக்கிறோம்.

சந்திரன் இயற்கை தத்துவப்படி நீருக்கு ஆதாரமாக இருப்பவர். சந்திரனின் ஆட்சி வீடு கடக ராசியாகும். இது ஜலராசி, இதனை கடக ஆழி என்று சொல்வார்கள். உச்சவீடு ரிஷபம், நீச்ச வீடு விருச்சிகம். நீர் இருக்கும் இடமெல்லாம் சந்திரன் ஆதிக்கம் செய்யும் இடங்கள்தான்.

சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் நன்மை தரும் அமைப்பில் இருந்து, அவரும் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு நன்மைகள் கிடைக்கும். கெடுதல் தரும் அமைப்பில் இருந்தால், நற்பலன்கள் குறையும்.

லக்னத்திற்கு 7-ம் இடத்தில் சந்திரன் இருந்தால் நன்மை தருபவராக இருப்பார்.

7ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

👉 அன்பான வாழ்க்கைத் துணைவர் அமைவார்.

👉 நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

👉 கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும்.

👉 குழப்பமான மனநிலையை கொண்டவர்கள்.

👉 பொறுமையான குணநலன்களை உடையவர்கள்.

👉 சமூக வாழ்க்கையில் ஈடுபாடு உடையவர்கள்.

👉 அலங்காரத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.

👉 தாய்வழி உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்.

👉 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

👉 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக