வேலைக்கு போன பிறகு தான் புரியது 'வெள்ளிக்கிழமை' மீது இருக்கும் காதல்! ஐயோ எப்ப டா வார இறுதி வரும்னு 'வைதேகி காத்திருந்தாள்' விஜய்காந்த் மாதிரி காத்து இருப்பேன். அதுவும் சரியா, என்னை(மற்ற பலரையும்) வெறுப்பேத்தும் வகையில் வெள்ளிக்கிழை மதியம் மீட்டிங் வைப்பார் பாஸ்! மதியம் ஆரம்பித்து மூன்று மணி நேரம் கதிகலங்க பேசுவார் பேசுவார் பேசிகொண்டே இருப்பார்.
மீட்டிங் பேசப்படும் எந்த ஒரு விஷயம் எனக்கும் என் வாழ்க்கையிலும் எந்த ஒரு நன்மையையும் கொடுக்கபோவதில்லை. இருந்தாலும் உட்கார்ந்து கேட்கனும். சில நேரத்தில் கொடுமையாய் கொடூரமாய் இருக்கும். போன மீட்டிங் போது பேசியதை மறுபடியும் பேசுவதற்கு ஒரு மீட்டிங். 'போட்டு தள்ளிடலாம்'னு வரும்!! வெள்ளிக்கிழமை அன்று இப்படி அறுத்தால்?? உச்சி முதல் பாதம் வரை வலிக்கும்! மனசு ரொம்ம்ம்ம்ம்ம்ப வலிக்கும்
அப்பரம் மீட்டிங் முடிஞ்சு கேபினுக்குள் வந்து உட்கார்ந்து ஒரு பெருமூச்சு விடுவோம் பாருங்க, மேசையில் இருக்கும் பேப்பர் எல்லாம் பறக்கும்! எங்க மறுபடியும் கூப்பிடுவாரோனு பயந்து அவசர அவசரமாய் கணினியில் பாதியில் விட்ட கோப்புகளை மூடிவிட்டு , மேசையில் கிடக்கும் பேப்பர்களை ஒரு ஓரமாய் வைத்துவிட்டு மொபைலையும் பையையும் எடுத்து கொண்டு சீனியர் ஆபிசர் கண்ணில் படாமல் விறுவிறு என்று ஓடி போய் பேருந்து நிறுத்தும் இடத்தில் நின்றால் வரும் சந்தோஷம் இருக்குதே..
யப்பா!!!!!!!!!!!யாஷிகா-வும் ,ஓவியா-வையும் ஒண்ணா பக்கத்துல ஒக்காந்த மாதிரி
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக