Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 19 அக்டோபர், 2020

முகம் பார்த்து வளரும், முடிவில்லாமல் தொடரும். அது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!! 

-----------------------------------------------

டாக்டர் : கண் ஆப்ரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு?

நோயாளி : போயும் போயும் இந்த கிழவி நர்ஸையா சைட் அடிச்சோம்னு தோணுது டாக்டர்...!

டாக்டர் : 😁😁

-----------------------------------------------

ராமு : கல்யாணமான புதுசுல என் பொண்டாட்டி தோசை சுடவா இட்லி சுடவான்னு கேட்பா!

சோமு : அப்ப இப்பெல்லாம்?

ராமு : இப்பெல்லாம் தோசை சுட வா.. இட்லி சுட வான்னு... கூப்பிடுறா..!

சோமு : 😆😆

-----------------------------------------------

குமார் : நேத்து உன்னையும், உன் தம்பியையும் பாத்தேன். நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...

தீபன் : எப்படி சொல்ற?

குமார் : பின்ன? ரெண்டு கழுதைகளை சேர்ந்து பாத்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?

தீபன் : 😠😠

-----------------------------------------------

விடுகதைகள்...!!

-----------------------------------------------

1. பிடி இல்லாத குடையைத் தொட முடியவில்லை. அது என்ன?

2. மனிதன் போடாத பந்தலிலே மலர்ந்து கிடக்கின்றன பூக்கள். அது என்ன?

3. மட்டை உண்டு, கட்டை இல்லை. பூ உண்டு, மணமில்லை. அது என்ன?

4. மூடாத வாய்க்கு முழ வால். அது என்ன?

5. முகம் பார்த்து வளரும், முடிவில்லாமல் தொடரும். அது என்ன?

6. திரி இல்லாத விளக்கு, உலகம் எல்லாம் தெரியும். அது என்ன?

7. சின்னத் தம்பி, குனிய வெச்சான். அது என்ன?

விடைகள் :

1. வானம்

2. நட்சத்திரம்

3. வாழை

4. அகப்பை

5. சொந்தம்

6. சூரியன்

7. முள்.

-----------------------------------------------

சிந்தனை வரிகள்...!!

-----------------------------------------------

காயங்களோடு சிரிப்பது எளிதல்ல... அப்படி சிரிக்க தொடங்கிவிட்டால், எந்த காயமும் பெரிதல்ல...

உன் மனதுக்குள் இருக்கும் அச்சம்தான், உன் முதல் எதிரி. நீ தயங்கி நிற்கும் முதல் நொடிதான், உன் முதல் தோல்வி...

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக