Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 19 அக்டோபர், 2020

மேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021.. பாகம் - 01

 மேஷம் ராசிக்காரங்களுக்கு மூக்குக்கு மேல கோபம் வருமாம் ஏன் தெரியுமா? | Mesha  Rasi/Aries Sign Person Characters and Nature - Tamil Oneindia

எதிலும் துணிச்சலுடன், இறங்கி போராடும் மேஷ ராசி அன்பர்களே !!

நடைபெற இருக்கின்ற குருப்பெயர்ச்சியில் குருவானவர் மேஷ ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். குருதேவர் தான் இருந்த இடத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும், ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

 

குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் மற்றும் இன்னல்கள் நீங்கி தெளிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்களுக்கு மருத்துவ உதவிகளின் மூலம் மேன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் பிறக்கும். மனதிற்கு பிடித்த பொன் மற்றும் புதிய வீடு, மனை போன்ற சொத்துச்சேர்க்கையை ஏற்படுத்தி கொள்வதற்கான காலக்கட்டங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கடனுதவிகள் சாதகமாக அமையும்.

 

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் ஈர்ப்பும், மந்த நிலையும் மாறி ஆர்வம் பிறக்கும். மனதில் தெளிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படக்கூடிய சூழ்நிலைகள் அமையும். பெரியோர்களின் வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். நண்பர்களிடம் ஏற்பட்ட சிறு சிறு வாக்குவாதங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும்.

 

பெண்களுக்கு :

உத்தியோகம் நிமிர்த்தமாக இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். தம்பதியர்களுக்கு இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். தனவரவுகள் சீராக அமையும். ஆன்மிகம் தொடர்பான வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

 

விவசாயிகளுக்கு :

பாசன வசதிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். கால்நடைகள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். நீர் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். வருட பயிர்களின் மூலம் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய நிலம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

 

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து அதை வெற்றி கொண்டு உயர்வும், பாராட்டும் பெறுவதற்கான காலக்கட்டங்கள் உருவாகும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். உயரதிகாரிகளிடத்தில் கிடைக்கும் ஆலோசனைகளின் மூலம் பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும்.

 

வியாபாரிகளுக்கு :

வியாபாரத்தில் இருந்துவந்த காலதாமதம் நீங்கி புத்துணர்ச்சியான வாய்ப்புகள் உருவாகும். எண்ணெய் வித்துக்களின் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். கணக்கு வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தவறுகளை உணர்ந்து அதை திருத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு லாபங்கள் மேம்படும்.

 

கலைஞர்களுக்கு :

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்ப கருவிகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைபட்டு போன சில ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.

 

வழிபாடு :

திருச்செந்தூரில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை சஷ்டி தினத்தில் சென்று வழிபாடு செய்து வர முன்னேற்றமான வாய்ப்புகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!