👉 விருச்சக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாயுடன் சுக்கிரன் சமம் என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
👉 உலக இன்பங்களை அனுபவிக்கக்கூடியவர்கள்.
👉 சிறந்த கற்பனையாளர்கள். சிலர் கவிஞர்களாக திகழக்கூடியவர்கள். எதிர்பார்த்த வாழ்க்கையை கற்பனையிலேயே வாழக்கூடியவர்கள்.
👉 விலை உயர்ந்த பொருட்களின் மீது எப்போதும் விருப்பம் உடையவர்கள். வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதில் அலாதி விருப்பம் உடையவர்கள்.
👉 எதற்கும் கவலைக்கொள்ளாதவர்கள். தான் விரும்பியதை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
👉 துணைக்கு கட்டுப்பட்டவர்கள். சற்று முரட்டுத்தனமான செயல்பாடுகளை உடையவர்கள். வசதியான வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.
👉 துணைவியின் மீது மிகுந்த அன்பும், பற்றும் உடையவர்கள். அதிக நண்பர்களையும், உறவினர்களையும் உடையவர்கள்.
👉 தூக்கம் என்பது இவர்களின் உற்ற நண்பன் போல் என் நிலையிலும், எவ்விடத்திலும் தூங்கக்கூடியவர்கள்.
👉 வெளிநாடு மற்றும் வெளியூர் பொருட்கள் மற்றும் பணிகள் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.
👉 பெரியோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கப்பெற்றவர்கள்.
👉 சிலர் தெய்வப் பணிகளை முன்னின்று செய்யக்கூடிய வல்லமை உடையவர்கள்.
👉 எதிர்பாலின மக்களுக்காக கூடுதல் செலவு செய்யக்கூடியவர்கள்.
👉 குலப்பெருமையை எந்த நிலையிலும் கெட்டு விடும் படி நடந்துக்கொள்ள மாட்டார்கள்.
👉 எந்த நிலையிலும் சுகவாசியாக வாழ விரும்பக்கூடியவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக