Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 2 மார்ச், 2021

5 மடங்கு லாபத்துடன் வெளியேறும் ரத்தன் டாடா.. லென்ஸ்கார்ட்-க்குப் பை பை..!

 28 மடங்கு வளர்ச்சி

இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் முதலீடு செய்யப் பல முன்னணி நிறுவனங்கள் தயங்கிய போது டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரத்தன் டாடா பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து இந்திய ஸ்டார்ட்அப் சந்தையின் வளர்ச்சிக்கு வித்திட்டார்.

லென்ஸ்கார்ட் நிறுவனம்

இந்நிலையில் ரத்தன் டாடா 2016ல் மூக்குக்கண்ணாடி-யை ஒரு லைப்ஸ்டைல் பொருளாக விற்பனை செய்யத் திட்டமிட்ட லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் ஆரம்பக் கட்டத்தில் முதலீடு செய்தார்.

ஐபிஓ வெளியிட லென்ஸ்கார்ட் தயாராகி வரும் நிலையில் இந்நிறுவனப் பங்குகளை விற்பனை செய்துவிட்டு முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளார்.

யூனிகார்ன் அந்தஸ்து

மேலும் டிசம்பர் மாதம் 2019ல் ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவனத்தின் 231 மில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் லென்ஸ்கார்ட் 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்று இந்திய ஸ்டார்ட்அப் சந்தையின் யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றது.

28 மடங்கு வளர்ச்சி

இந்நிலையில் என்டிாகர் நிறுவனத்தின் அறிக்கைப்படி ரத்தன் டாடா 2016ல் லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும், இந்த முதலீடு தற்போது 28 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறுகிறது.

உண்மை நிலவரம்

ஆனால் டாடா தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள் படி ரத்தன் டாடா முதலீடு செய்துள்ள தொகை தற்போது 4.6 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறுகிறது.

ரத்தன் டாடா

ரத்தன் டாடா தனது சொந்த முதலீட்டு நிறுவனத்தின் வாயிலாக இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக ஓலா, ஓலா எலக்ட்ரிக், க்யூர் பிட், பர்ஸ்ட் க்ரை, அர்பன் கம்பென எனப் பல நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக