Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 2 மார்ச், 2021

புதிய டிவி சேனல் துவங்கிய ஆனந்த் மஹிந்திரா.. பகுத் அச்சா..!

  புதிய டிவி சேனல் துவங்கிய ஆனந்த் மஹிந்திரா.. பகுத் அச்சா..!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, ஆட்டோமொபைல், ஐடி சேவை என 25 துறைகளில் வர்த்தகம் செய்து வரும் நிலையில், தற்போது புதிதாக மீடியா துறைக்குள் மிகப்பெரிய திட்டத்துடன் நுழைந்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா தனது குடும்ப முதலீட்டில் இயங்கும் அலுவலகத்தின் வாயிலாக IN10 மீடியா நெட்வொர்க் என்ற நிறுவனத்தைத் துவங்கினார். இந்நிறுவனத்தின் வாயிலாகத் தற்போது Ishara என்ற புதிய ஹிந்தி பொழுதுபோக்கு சேனலை துவங்கியுள்ளார்.

பொதுவாக ஆங்கிலத்தில் டிவீட் செய்யும் ஆனந்த் மஹிந்திரா ஹிந்தி பொழுதுபோக்கு சேனலான Ishara-வை பிரபலப்படுத்தும் விதமாகத் தனது டிவிட்டரில் புதிய சேனல் குறித்து ஹிந்தியில் டிவீட் செய்திருந்தார்.இதுமட்டும் அல்லாமல் Ishara சேனலில் புதிதாக ஒளிபரப்பு செய்ய உள்ள பாப்பநாசினி கங்கா என்ற புதிய தொடரின் டிரைலரையும் ரீட்வீட் செய்து அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டும் எனவும் டிவீட் செய்திருந்தார்.

Ishara சேனல் தற்போது முதற்கட்டமாக டிடிஹெச், கேபிள் இணைப்பில் இருக்கும் வாடிக்கையாளர்களைச் சென்று அடையும் நோக்கில் செயல்படத் துவங்கியுள்ளது. மேலும் 5க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து தொடர்களை வெளியிட உள்ளது.

ஆனந்த் மஹிந்திரா ஏற்கனவே எபிக் டிவி சேனல்-ஐ வைத்திருந்தார், இதுவும் IN10 மீடியோ நெட்வொர்க் நிறுவனத்தின் ஒரு முக்கியப் பிராண்டாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக