Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 1 ஏப்ரல், 2021

ஒரே எழுத்து இரண்டு இடத்திலும் வரும்... கண்டுபிடியுங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------

சிதறடிக்கும் ஜோக்ஸ்...!!

-----------------------------------------------

ரசிகர் : எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்.

பாடகர் : அப்படியா?

ரசிகர் : பின்ன, அந்த கஷ்டத்துல என் சின்ன கஷ்டம் ஒன்னும் பெரிசா தெரியாது பாருங்க.

பாடகர் : 😩😩

-----------------------------------------------

 

நோயாளி : காதுல பஸ் ஓடுற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்.

டாக்டர் : பரிசோதித்து விட்டு அப்படி ஒன்னும் எனக்கு... கேட்கலையே!

நோயாளி : இப்போ ஏதாவது சிக்னல்- நின்னுருக்குமோ?

டாக்டர் : 😂😂

-----------------------------------------------

புதிர் கேள்விகள்....!!

-----------------------------------------------

 

1. இரு ஆசிரியர்கள் ஒரே

 கல்லூரியில் பணிபுரிகின்றனர். அதில் ஒருவர் மற்றவரின் மகனின் தந்தையாவார். அப்படியெனில், இருவருக்குமான உறவு என்ன?

 

2. இது பல வண்ணங்களில் இருக்கும். எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும், கோடி ரூபாய் கொடுத்தாலும் சில நிமிடங்களுக்கு மேல் இருக்காது. எப்பேர்பட்ட கொம்பனாலும் இதை தொடவும் முடியாது. பிடிக்கவும் முடியாது அது என்ன?

 

விடை கீழே...👇👇

 

ஒரே எழுத்து இரண்டு இடத்திலும் வரும்... கண்டுபிடியுங்கள்...!!

1. _க்க_

 

2. _பள_

 

3. _ந்_ம்

 

4. _ஞ்_லம்

 

5. _ளங்_ம்

 

விடை :

 

1. அடிக்கடி

 

2. சம்பளம்

 

3. தந்தம்

 

4. சஞ்சலம்

 

5. களங்கம்

-----------------------------------------------

பழமொழியும்... விளக்கமும்...!!

-----------------------------------------------

 

சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?

 

தமிழ் விளக்கம் :

 

சோற்றில் உள்ள சின்னக் கல்லுக்கும், ஞானத்துக்கும் என்ன தொடர்பு? சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும், தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத்துன்பம். அதை முழுவதும் நீக்கவேண்டுமானால், அரிசியில் நன்றாகக் கற்கள் பொறுக்கியும், அரிசியை நன்கு களைந்தும் சமைக்க வேண்டும். இதற்குச் சோம்பல்பட்டு கல்லைக்கூட நீக்காமல் சோறை முழுங்கும் ஒருவன் எப்படி சோற்றில் கல்போன்று, தினசரி வாழ்வில் நாம் வரவழைத்துக்கொள்ளும் சிறு சிறு ஒழுக்கக் கேடுகளின் மூலத்தை அறிந்து களைவதால் ஞானம் என்னவென்று தெரிந்துகொள்ள வழிபிறக்கும் என்பதை உணரமுடியும் என்பது செய்தி.

விடை :

 

1. கணவன் - மனைவி

 

2. வானவில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக