கேது கிரகத்தின் தீய பலன்கள் ஏற்படாமல்
தடுத்து, நற்பலன்களை பெற கேது கிரக சாந்தி பரிகார பூஜை செய்வது சிறந்ததாகும்.
வைடூரியத்தை வெள்ளியில் செய்யப்பட்ட மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வதால்
கேதுபகவானின் நல்லாற்றலை உங்களுக்கு பெற்று தரும்.
ஆன்மிகம் தொடர்புடைய தொழில், இறை
சம்பந்தப்பட்ட கடை, புரோகிதம், ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாட்டாளர், உளவுத்துறை,
தூதரகப் பணி, துப்பறிவாளர்கள், கைரேகை நிபுணர், டிடெக்டிவ் ஏஜென்சி, ஜோதிடர்கள் என
இவர்களுக்கெல்லாம் கொள்ளு உணவை தானம் தந்தால் நிம்மதியான வாழ்வும், வளமான வாழ்க்கையும்
அமையும்.
ஆயுள்காரகன் சனிபகவான் ஆவார். இந்த
ஆயுளை அரித்து விரைவில் இறைவனடியை சேர்க்க கேதுபகவான் துணை நிற்பார்.
லக்னத்திற்கு 6-ல் கேது இருந்தால் அந்த
ஜாதகக்காரர்கள் தர்மசிந்தனை உடையவராக இருப்பார்கள்.
6ல்
கேது இருந்தால் என்ன பலன்?
👉 தனது துறைகளில் தலைவராக
இருக்கக்கூடியவர்கள்.
👉 சொந்த பந்தங்களை
நேசிக்கக்கூடியவர்கள்.
👉 பலதுறைகளிலும் அறிவு
கொண்டவர்கள்.
👉 வயிற்றுக்கோளாறுகள்
உண்டாகும்.
👉 பெருந்தன்மையான குணநலன்களை
கொண்டவர்கள்.
👉 உயர்கல்வி கற்பார்கள்.
👉 எதிர்ப்புகளை வெற்றிக் கொள்ளும்
ஆற்றல் கொண்டவர்கள்.
👉 வாதாடுவதில் வல்லவர்கள்.
👉 கடன் சார்ந்த பிரச்சனைகள்
இல்லாதவர்கள்.
👉 எதிலும் விரைந்து
செயல்படக்கூடியவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக