-------------------------------------------
மனம் விட்டு சிரிங்க...!!
-------------------------------------------
பாபு : நம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்...!
கோபு : எப்படி சொல்ற?
பாபு : நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே!
கோபு : 😛😛
-------------------------------------------
மனோஜ் : ஏன்டா திடீர்னு சுடுகாட்டுக்கு போறேன்னு சொல்ற?
கணேஷ் : ஆவி பிடிச்சா ஜலதோஷம் உடனே பறந்துடும்னு டாக்டர்தான் சொன்னாரு!
மனோஜ் : 😉😉
-------------------------------------------
விடுகதைகள்....!!
-------------------------------------------
1. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன?
2. கண்ணில் தென்படுவேன், கையில் பிடிபட மாட்டேன். நான் யார்?
3. அடித்து நொறுக்கி அனலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன?
4. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார்?
5. நாலு மூலைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத் தண்ணீர் இல்லை. அது என்ன?
1. மத்து
2. புகை
3. சாம்பிராணி
4. தலையணை
5. அச்சு வெல்லம்
-------------------------------------------
பிறமொழி சொற்கள்... தமிழ் சொற்கள்...!!
-------------------------------------------
1. மாமூல் - வழக்கம்
2. ரத்து - நீக்கம்
3. அமல் - நடைமுறை
4. உபந்நியாசம் - சமயச் சொற்பொழிவு
5. சம்பிரதாயம் - மரபு
6. இலட்சணம் – அழகு
-------------------------------------------
இது எப்படி இருக்கு?
-------------------------------------------
1. மாணவர்கள் எந்த சாலையில் அமருவார்கள்?
பாட'சாலை"யில்
2. சோர்வாக உள்ள நாடு எது?
'அயர்"லாந்து
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக