உலகளவில் முன்னணி நிதியியல் சேவை நிறுவனமாக விளங்கும் மாஸ்டர்கார்டு சில மாதங்களுக்கு முன்பாகவே கிரிப்டோகரன்சி பேமெண்ட்-ஐ ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது இந்நிறுவனத்தில் சக போட்டி நிறுவனமான விசாவும் கிரிப்டோகரன்சி பேமெண்ட்-ஐ ஏற்றுக்கொண்டு உள்ளது.
உலகின் மிக முக்கியமான மற்றும் முன்னணி பேமெண்ட் சேவை நிறுவனமான விசா, நீண்ட ஆலோசனைக்குப் பின் கிரிப்டோகரன்சி வாயிலான பேமெண்ட்டு-க்கு ஒப்புதல் அளித்துள்ளது கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
கிரிப்டோகரன்சி பயன்பாடு
அமெரிக்கா உட்பட பல நாடுகள் கிரிப்டோகரன்சி பயன்பாட்டை ஏற்றுக்கொண்டு வரும் இதேவேளையில் இந்தியா போன்று பல நாடுகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைத் தடை செய்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் முழு மனதாகவும், நம்பிக்கையுடனும் முதலீடு செய்ய முடியாமல் உள்ளனர்.
விசா ஒப்புதல்
விசா வெளியிட்டுள்ள அறிவிப்பில் USD காயின் கிரிப்டோகரன்சி வாயிலான பேமெண்ட்களை இனி தனது நெட்வொர்க்கில் ஏற்க உள்ளதாக அறிவித்துள்ளது. விசா போன்ற உலகளவிலான நிதியியல் நிறுவனம் கிரிப்டோ பேமெண்ட் தளத்திற்குள் வரும் நிலையில் கிரிப்டோ மூலம் செய்யப்படும் வர்த்தகம் அதிகரிக்கும்.
USD காயின்-க்கு விசா ஒப்புதல்
USD காயின் என்பது ஒரு நிலையான கிரிப்டோகரன்சி, இதன் மதிப்பு நேரடியாக அமெரிக்க டாலரில் தான் மதிப்பிடப்படும். கிரிப்டோ பேண்ட்மென்ட்-காக விசா நிறுவனம் கிரிப்டோ.காம் என்ற தளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தற்போது USD காயின் பேமெண்ட்-ஐ ஏற்க முடிவு செய்துள்ளது.
அனுமதி அதிகரிப்பு
இந்த வருடத்தின் இறுதிக்குள் கிரிப்டோ.காம் தளத்தின் வாயிலாக 5க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சியைக் கொண்டு பேண்மென்ட் செய்யும் சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
முக்கிய நிறுவனங்கள் அனுமதி
சமீபத்தில் பாங்க் ஆப் நியூயார்க் மெலன், பிளாக்ராக் இன்க், மாஸ்டர்கார்ட் போன்ற பல நிதியியல் சேவை நிறுவனங்கள் கிரிப்டோகரன்சியை ஏற்க துவங்கியுள்ளது. தற்போது இந்தக் கூட்டணியில் விசாவும் இணைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக