Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 ஏப்ரல், 2020

அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், மேலராஜவீதி, தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

மூலவர் – பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்)
பழமை – 500 வருடங்களுக்கு முன்
ஊர் – தஞ்சாவூர்
மாவட்டம் – தஞ்சாவூர்
மாநிலம் – தமிழ்நாடு

பிரதாபசிம்மன் என்ற மன்னன் பிரதாப வீர ஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். ஒருமுறை எதிரிப்படையினர் நாட்டை முற்றுகையிட்டபோது, பிரதாப சிம்மராஜா மூலை அனுமாரை வேண்டினார். ஆஞ்சநேயர் வானர சேனைகளை உருவாக்கி எதிரிநாட்டு படையை ஓட ஓட விரட்டினார். தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் பிரதாபசிம்மன் ஆஞ்சநேயருடன் ஐக்கியமானதாக கோவில் வரலாறு கூறுகிறது. எனவே தான் இவருக்கு பிரதாப வீர ஆஞ்சநேயர் என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்கு மூலை அனுமார் என்று பெயர் வர ஒரு காரணம் உண்டு. தஞ்சாவூரில் நான்கு ராஜ வீதிகள் உள்ளது. மூலை அனுமார் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி தனக்கு கோயில் எழுப்பும்படி தஞ்சை மன்னனுக்கு ஆணையிட்டார். எனவே பக்தர்களால் மூலை அனுமார் என பெயர் சூட்டப்பட்டு அதுவே நிலைத்துவிட்டது.

முகலாய படையெடுப்பின் போது காஞ்சிபுரத்தில் இருந்த பங்காரு காமாட்சி அம்மன் சிலை தஞ்சைக்கு எடுத்து வரப்பட்டது. சிலைக்கு அடைக்கலம் தர அனைவரும் பயந்தபோது இந்த தலத்திலேயே சிலையை மறைத்து வைத்திருந்தனர். இராம பக்தர்களின் கனவில் தோன்றிய அனுமான் பங்காரு காமாட்சி அம்மனுக்கு தன் கோயில் அருகிலேயே கோயில் அமைக்கும்படி ஆணையிட்டார். ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போது, தன் தாயின் மடியில் அமர்ந்திருந்த சிற்பம் புகழ் பெற்றது. குழந்தைப் பேறுக்காக வேண்டுபவர்களும், புதுமணத் தம்பதிகளும் இவர்களை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கை. பாம்பு, நிலவை கவ்வி பிடிக்க வருவது போன்ற சிற்பமும் இங்கு உள்ளது. இதை கண்டவர்களுக்கு இராகு,கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்குள்ள வேப்பமரத்தை அம்பாளாகக் கருதுகின்றனர். அம்பாள் இராம நாமத்தை வேப்பமர வடிவத்தில் நின்று கேட்பதாக நம்பிக்கை.

படிப்பில் தடை, திருமணத்தடை, வியாதிகள், தொடர்ந்து துன்பங்கள் நேர்ந்தால் மூலை அனுமாரை மூல நட்சத்திர நாட்களில் வழிபடுவது சிறப்பு. அன்று 18 அகல் விளக்குகள் ஏற்றி 18 முறை மவுனமாக கோயிலை வலம் வருவார்கள். 18 நாட்கள் முதல் 18 ஆண்டுகள் வரை இந்த பிரார்த்தனையைச் செய்யலாம். மார்கழி மாதத்தில் ஏதாவது ஒரு நாளில் 1008 இராமநாமம் எழுதுகின்றனர். ஒரு முறை வலம் வரும்போது 56 முறை இராம என்ற மந்திரத்தை எழுதினால், 18 முறை வலம் வந்தால் 1008 இராம ஜெபம் நிறைவுபெற்று விடும். மூலநட்சத்திரத்தன்று வழிபாடு செய்ய விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

இக்கோயிலில் சீதையுடன் பட்டாபிஷேக ராமர், ருக்மணி, பாமா சமேதராக கிருஷ்ண பகவான், இலட்சுமி நரசிம்மர், சங்கரநாராயணர், ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் தியானம் செய்யும் கற்சிற்பம் ஆகியவை உள்ளன. பத்து தலை ராவணன் சிலையும், வாலை சுருட்டி ஆஞ்சநேயர் அமர்ந்துள்ள சிற்பமும் இங்குள்ளன. இது தவிர, 12 ராசிகள் அடங்கிய ராசி மண்டல சிற்பமும் இருக்கிறது. அவரவர் ராசி முன்பு நின்று மூலை அனுமாரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

திருவிழா:

ராம நவமி, அனுமன் ஜெயந்தி.

வேண்டுதல்கள்:

குழந்தைப் பேறுக்காக வேண்டுபவர்களும், புதுமணத் தம்பதிகளும் இவர்களை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கை. படிப்பில் தடை, திருமணத்தடை, தீராத வியாதிகளிலிருந்து விடுபட, தொடர்ந்து துன்பங்கள் நேர்ந்தால் மூலை அனுமாரை மூல நட்சத்திர நாட்களில் வழிபடுவது சிறப்பு.

நேர்த்திக்கடன்:

வேண்டுதல்கள் நிறைவேற 18 அகல் விளக்குகள் ஏற்றியும், 1008 இராம ஜெபம் எழுதியும் வழிபடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக