Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 31 ஜூலை, 2021

இந்தியாவில் 1 பில்லியன் டாலர் வருமானம்.. மார்க் ஜூக்கர்பெர்க் செம ஹேப்பி..!

  பேஸ்புக் குரூப் இந்திய வர்த்தகம்

உலகின் முன்னணி சமுகவலைதள நிறுவனமாக உருவெடுத்திருக்கும் பேஸ்புக் இந்தியாவில் தான் செய்யும் வர்த்தகத்தின் வாயிலாக மட்டும் கொரோனா தொற்று நிறைந்த 2021ஆம் நிதியாண்டில் 1 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது

கொரோனா காலத்தில் மக்கள் அதிகளவிலான நேரம் பேஸ்புக் தளத்தில் மூழ்கியிருந்த காரணத்தால் இந்நிறுவனத்தின் விளம்பர வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் மக்கள் பேஸ்புக் பயன்படுத்தும் நேரம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இது அனைத்தும் லாக்டவுன் மூலமே நடந்தது என்றால் மிகையில்லை.

பேஸ்புக் குரூப் இந்திய வர்த்தகம்

2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பேஸ்புக் குரூப் அதாவது பேஸ்புக் - இன்ஸ்டாகிராம் - வாட்ஸ்அப் ஆகியவற்றின் வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருமானத்தின் அளவு 9,000 கோடி ரூபாய் அதாவது 1.2 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்று இருக்கும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.

பேஸ்புக் - இன்ஸ்டாகிராம் - வாட்ஸ்அப் வருவாய்

இது கடந்த நிதியாண்டில் 6,613 கோடி ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில், கொரோனா தொற்றுக் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கினர். இதன் வாயிலாக மக்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமுகவலைதளத்தில் வழக்கத்தை விடவும் அதிக நேரம் பயன்படுத்திய காரணத்தால் வருமானம் 1.2 பில்லியன் டாலர் வரையில் அதிகரித்துள்ளது.

பேஸ்புக் குரூப் தரவுகள்

தற்போது வெளியாகியுள்ள அனைத்து தரவுகளும் கணிக்கப்பட்டவை, உண்மையான தரவுகள் பேஸ்புக் குரூப் நிறுவன பதிவு அமைப்பில் தரவுகளைச் சமர்ப்பித்த பின்பே முழுமையான தரவு தெரியும். இந்தியாவில் பேஸ்புக் குரூப்-ன் வர்த்தகம் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது.

மலிவான டேட்டா கட்டணம்

பேஸ்புக் இந்தியாவில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம் மலிவான டேட்டா கட்டணம் தான். இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் மத்தியிலான வர்த்தகப் போட்டி மிகப்பெரிய அளவில் வெடித்த காரணத்தால், வாடிக்கையாளர்களையும் வர்த்தகத்தையும் தக்க வைத்துக்கொள்ள டேட்டா கட்டணத்தைப் பெரிய அளவில் குறைத்தது.

அமெரிக்கா, சீனா, பிரிட்டன்

இந்தியாவில் தற்போது இருக்கும் இண்டர்நெட் டேட்டா கட்டணம் அமெரிக்கா, சீனா, பிரிட்டன் போன்ற வளரும் நாடுகளை விடவும் குறைவு. இதேவேளையில் உலகளவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விற்பனை சூடுபிடித்த காரணத்தால் இரண்டும் பேஸ்புக் குரூப் வர்த்தகத்திற்குப் பெரிய அளவில் உதவியுள்ளது.

பேஸ்புக் நிர்வாகத் தலைவர் அஜித் மோகன்

இதுகுறித்து பேஸ்புக் இந்தியாவின் நிர்வாகத் தலைவரான அஜித் மோகன் கூறுகையில், கடந்த ஒரு வருடத்தில் மக்கள் வெறுமென ஆன்லைன் உலகத்திற்கு வரவில்லை, வர்த்தகம், பிராண்ட்களை ஆன்லைன் மூலம் தங்களுடன் இணைத்துக் கொண்டு உள்ளனர். இதனால் ஆன்லைன் விளம்பர வர்த்தகம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

பேஸ்புக் குரூப் வாடிக்கையாளர் எண்ணிக்கை

2020-21ஆம் நிதியாண்டின் முடிவில் பேஸ்புக் குரூப் கீழ் இருக்கும் வர்த்தகப் பிரிவுகளின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை.

வாட்ஸ்அப் - 530 மில்லியன் வாடிக்கையாளர்கள்

பேஸ்புக் - 416 மில்லியன் வாடிக்கையாளர்கள்

இன்ஸ்டாகிராம் - 210 மில்லியன் வாடிக்கையாளர்கள்

இதன் மூலம் இந்தியாவில் மட்டும் சுமார் 1.156 பில்லியன் வாடிக்கையாளர்களை வைத்துள்ளது பேஸ்புக் குரூப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக