Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 31 ஜூலை, 2021

பென்ஷன் இல்லை என டென்ஷன் எதற்கு; ₹10,000 ஓய்வூதியம் தரும் அசத்தல் திட்டம்

முதுமையைப் பற்றிய கவலை அனைவருக்கும் இருக்கும். உங்கள் ஓய்வு காலத்தில், யாரையும் சாராமல் இருக்க, தகுந்த இடத்தில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால்,  அரசாங்கத்தின் அடல் ஓய்வூதிய திட்டத்தில் (APY) பணத்தை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், கணவன் -மனைவி இருவரும் தனி கணக்குகள் மூலம் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10,000 பெறலாம்.

அடல் பென்ஷன் யோஜனா: முதுமையைப் பற்றிய கவலை அனைவருக்கும் இருக்கும். உங்கள் ஓய்வு காலத்தில், யாரையும் சாராமல் இருக்க, தகுந்த இடத்தில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால்,  அரசாங்கத்தின் அடல் ஓய்வூதிய திட்டத்தில் (APY) பணத்தை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், கணவன் -மனைவி இருவரும் தனி கணக்குகள் மூலம் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10,000 பெறலாம்.

அடல் பென்ஷன் யோஜனா என்னும் ஓய்வூதிய திட்டம் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் முறை சாரா அமைப்புகளில் பணிபுரியும் மக்களுக்காக தொடங்கப்பட்டது, ஆனால் இப்போது 18 முதல் 40 வயதுடைய எந்தவொரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதில் எளிதாக முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில், வைப்புதாரர்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறத் தொடங்குகின்றனர்.

அடல் ஓய்வூதியத் திட்டம் என்பது அரசாங்கத்தின் திட்டமாகும். அதில் நீங்கள் செய்யும் முதலீட்டின் அளவு உங்கள் வயதைப் பொறுத்தது. இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் குறைந்தபட்சம் 1,000, 2000, 3000, 4000 மற்றும் அதிகபட்சம் 5,000 ரூபாய் என்ற அளவில் மாத ஓய்வூதியத்தைப் பெறலாம். இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும், இதில் நீங்கள் பதிவு செய்ய, சேமிப்புக் கணக்கு, ஆதார் எண் மற்றும் மொபைல் எண் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயதுடையவர்கள் அனைவரும் சேரலாம். விண்ணப்பதாரர் ஒரு வங்கி அல்லது தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். இதில் நீங்கள் ஒரு அடல் ஓய்வூதியக் கணக்கை மட்டுமே தொடங்க முடியும் . இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் எவ்வளவு குறைந்த வயதில் முதலீட்டை தொடக்குகிறீர்களோ, அந்த அளவிற்கு சிறந்த பலனை . ஒரு நபர் 18 வயதில் அடல் ஓய்வூதிய யோஜனாவில் சேர்ந்தால், 60 வயதிற்குப் பிறகு, அவர் ஒவ்வொரு மாதமும் ரூ .5000 என்ற ஓய்வூதியத்தை பெற,  மாதத்திற்கு வெறும் 210 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும்.   

39 வயதிற்குட்பட்ட வாழ்க்கைத் துணை இருவரும் இத்திட்டத்தில் தனித்தனியாக சேர்ந்தால், அதன் மூலம் 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ .10,000 கூட்டாக ஓய்வூதியம் பெறுவார்கள். கணவனும் மனைவியும் 30 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்களாக இருந்தால், அவர்கள் தங்களது APY கணக்குகளுக்கு மாதம் ரூ. 577 பங்களிக்கலாம். கணவன் மற்றும் மனைவியின் வயது 35 வயதாக இருந்தால், அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ .902  தங்கள் APY கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். உத்தரவாதமளிக்கப்பட்ட மாதாந்திர ஓய்வூதியத்துடன், வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் இறந்தால், எஞ்சியிருக்கும் பங்குதாரர் ஒவ்வொரு மாதமும் வாழ்நாள் முழுவதற்கும் ஆன ஓய்வூதியத்துடன் ரூ .8.5 லட்சத்தைப் பெறுவார்கள்.

அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்யும் நபர்களுக்கு வருமான வரி சட்டம் 80 சி -யின் கீழ் 1.5 லட்சம் வரை வரிச் சலுகை கிடைக்கும். வரி விதிக்கக்கூடிய வருமானம் இதிலிருந்து கழிக்கப்படுகிறது. இது தவிர, சில சந்தர்ப்பங்களில் ரூ .50,000 வரை கூடுதல் வரி சலுகை கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த திட்டத்தில் ரூ .2 லட்சம் வரை விலக்கு கிடைக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக