Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 மே, 2020

வெற்றி பெற... இதோ மூன்றே மூன்று வழிகள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

இது சிரிப்பதற்கான நேரம்...!!

அருண் : ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுற?
குமார் : ஏன்னா... அது நெருப்பு கோழியாச்சே....
அருண் : 😩😩
---------------------------------------------------------------------
ராமு : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா.
சோமு : நீ என்ன பண்ணுவ?
ராமு : நான் காலியாயிடுவேன்.
சோமு : 😂😂
---------------------------------------------------------------------
மாணவன் : சார் வயிறு வலிக்குது.
ஆசிரியர் : வயித்துல ஒன்னுமில்லைன்னா, அப்படித்தான் வலிக்கும்.
மாணவன் : அப்படின்னா, நேத்து நீங்க தலை வலிக்குதுன்னு சொன்னீங்களே!
ஆசிரியர் : 😳😳
---------------------------------------------------------------------
கணவன் : உங்க புத்தகத்துல ஆண்களுக்கென்று ஒரு பகுதி கூட கிடையாதா?
மனைவி : ஏன் இல்லை...? சமையல் குறிப்புன்னு ஒரு பகுதி இருக்கே...!
கணவன் : 😏😏
---------------------------------------------------------------------
டங்கு சிலிப் ஆகுதா?

லகர ளகரமும் ழகர லகரமும் றகர ழகரமும் பழக்கத்தில் புழக்கத்தில் இருந்தாலும் குழந்தைகள் பேசும்போது வழ கொழ பேச்சாத்தான் இருக்கும்.
---------------------------------------------------------------------
விடுகதைகள்...!

1. தண்ணியில்லாத காட்டில் அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?

2. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டுறான். அவன் யார்?

3. எழுதி எழுதியே தேய்ந்து போனான். அவன் யார்?

4. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள். அது என்ன?

விடைகள் :

1. ஒட்டகம்
2. கரண்டி
3. பென்சில்
4. வெண்டைக்காய்.
---------------------------------------------------------------------
வாழ்க்கைத் தத்துவங்கள் !!

வெற்றி பெற மூன்று வழிகள்...

ஒன்று.. மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்...

இரண்டு.. மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்...

மூன்று... மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக