Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 மே, 2020

கண், காது, இமை எதுவும் அவரை போல இல்லை.. பாடி டபுளை அனுப்பினாரா கிம் ஜோங் உன்.. வெடித்த சர்ச்சை!

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தன்னுடைய பாடி டபுள் எனப்படும் உடலை இரட்டையரை வெளியே அனுப்பி இருக்கிறார், அவர் இன்னும் வெளியே வரவில்லை, அவர் எங்கோ தலைமறைவாக இருக்கிறார் என்ற புதிய சர்ச்சை இணையத்தில் வெடித்துள்ளது.

திடீர் என்று காணாமல் போய் இருந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் 21 நாட்களுக்கு பின் கடந்த வாரம் மீண்டும் மக்கள் முன்னிலையில் தோன்றினார். அவரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில் அவர் மக்கள் முன்னிலையில் தோன்றினார்.
அவர் இறந்துவிட்டதாக, மூளை சாவு அடைந்துவிட்டதாக செய்திகள் பரவிய வண்ணமிருந்தது. இந்த நிலையில் வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அவர் வெளியே வந்து இருக்கிறார்.
உண்மை என்ன?

இந்த நிலையில் இப்போதும் கிம் ஜோங் உன் அந்த 21 நாட்கள் எங்கே போனார் என்ற விவரம் வெளியாகவில்லை. அவருக்கு உண்மையில் இதயத்தில் ஆபரேஷன் நடந்ததா அல்லது வேறு எங்காவது சென்று இருந்தாரா என்று விவரம் வெளியாகவில்லை. வடகொரியா ஊடகங்கள் இதை பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. அந்நாட்டு அரசும் இது அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
பெரிய சந்தேகம்
இந்த நிலையில் கிம் ஜோங் உன்னின் புதிய புகைப்படங்கள் பெரிய அளவில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி கிம் ஜோங் உன்னின் புதிய புகைப்படத்தில், வீடியோவில் அவர் வேறு மாதிரி இருக்கிறார். அவரின் பற்கள் உடைந்துள்ளது. அவரின் இமை வேறு மாதிரி இருக்கிறது. கண்கள் கூட வேறு மாதிரி உள்ளது. அதோடு கன்னம் கூட வேறு மாதிரி இருக்கிறது. இது உண்மையில் கிம் ஜோங் உன் இல்லை என்கிறார்கள்.
தென்கொரியா நபர்கள்
தென் கொரியாவை சேர்ந்த சிலரும் அமெரிக்காவை சேர்ந்த சிலரும் இந்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்கள். இதற்கான புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர். கிம் ஜோங் உன் தனக்கு என்று பாடி டபுள் எனப்படும் உடலை இரட்டையரை வைத்து இருந்தார். தன்னை பாதுகாத்துக் கொள்ள அவ்வப்போது தன்னை போலவே இருக்கும் உடல் இரட்டையரை அவர் வெளியே அனுப்புவார். அந்த நபர்தான் இவர்.
வெளியே அனுப்பி மாட்டிக்கொண்டார்
இப்போதும் அதேபோல் அவர் உடல் இரட்டையரை வெளியே அனுப்பி மாட்டிக்கொண்டார் என்று அவர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். ஆனால் இந்த சர்ச்சையை வடகொரியா ஊடங்கள் மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. அதேபோல் கிம் ஜோங் உன்னின் தோற்றத்தில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் குறித்தும் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் கிம் ஜோங் உன் குறித்து இப்போதும் சந்தேகம் நிலவி வருகிறது.
பாடி டபுள் யார்

இதற்கு முன் இதேபோல் பெரிய தலைவர்கள் பாடி டபுள் வைத்து இருந்ததாக சர்ச்சை எழுந்தது. ஹிட்லர் தனக்கு என்று பாடி டபுள் வைத்து இருந்தார். சாதம் உசைன், ஒசாமா பின்லேடன் ஆகியோர் கூட பாடி டபுள் வைத்து இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. பெரிய நபர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் போது இதேபோல் பாடி டபுள் வைத்து இருப்பது வழக்கம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக