வெள்ளி, 15 மே, 2020

இரண்டே இரண்டு வார்த்தை... பைத்தியமான கணவன் ... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

மனைவி : ஏங்க நான் முடி வெட்டிக்கவா?
கணவன் : ஓகே, வெட்டிக்கோ.
மனைவி : வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும்.
கணவன் : சரி, வெட்டிக்காதே.
மனைவி : ஆனால் முடியை கம்மியா வெச்சிக்கிறதுதான் இப்ப ஃபேஷன்.
கணவன் : ஓகே, வெட்டிக்கோ.
மனைவி : வெட்டிக்கிட்டால், என்னோட ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணினாலும் பண்ணுவாங்க.
கணவன் : சரி, வெட்டிக்காதே.
மனைவி : வெட்டிக்கிட்டா என்னோட சின்ன முகத்திற்கு நல்லாருக்கும்னு எங்கம்மா சொன்னாங்க.
கணவன் : ஓகே, வெட்டிக்கோ.
மனைவி : சலூன் கடையில் கேவலமாக வெட்டிட்டால் என்ன செய்யுறது?
கணவன் : சரி, வெட்டிக்காதே.
மனைவி : பரவாயில்லை, வெட்டிக்கிறதுதான் சரின்னு நினைக்கிறேன்.
கணவன் : ஓகே, வெட்டிக்கோ.
மனைவி : முடி வெட்டுனதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா நீங்கதான் பொறுப்பு.
கணவன் : சரி வெட்டிக்காதே.
மனைவி : முடி கம்மியா இருந்தா பராமரிக்கிறது கணவன் : ஓகே, வெட்டிக்கோ.
மனைவி : அசிங்கமா போயிடுமோன்னு பயமா இருக்கு.
கணவன் : சரி, வெட்டிக்காதே.
மனைவி : என்ன வந்தாலும் சரி, நான் முடி வெட்டிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.
கணவன் : ஓகே, வெட்டிக்கோ.
மனைவி : உங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு எனக்கு தெரியலை.
கணவன் : சரி, வெட்டிக்காதே.
மனைவி : சரி இதை விடுங்க. என் தொண்டை வலிக்கு எப்ப டாக்டரை பார்க்க போறது?
கணவன் : ஓகே, வெட்டிக்கோ.
மனைவி : என்னது? நான் டாக்டரை பத்தி பேசிக்கிட்டு இருக்கேன்.
கணவன் : சரி, வெட்டிக்காதே.
மனைவி : ஹலோ, உங்களுக்கு என்னாச்சு? நீங்கள் என்ன பேசுறீங்க?
கணவன் : ஓகே, வெட்டிக்கோ.
மனைவி : அட கடவுளே, உங்களுக்கு என்னங்க ஆச்சு?
கணவன் : சரி, வெட்டிக்காதே.

---------------------------------------------------------------------
படித்ததில்... பிடித்தது...!!

ஆசைக்கும், அன்புக்கும் அடிமை ஆகாதீர்கள்...
ஏனெனில் இரண்டுமே நம்மை அடிமையாக்கிவிடும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்