Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜூலை, 2020

தோட்டக்காரரின் நம்பிக்கை... குரங்குகளின் செயல்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!!
---------------------------------------------------------------
காவலர் : ஏன்டா.. கோவில்ல இருந்த சிலையை திருடுன? 
திருடன் : திருடல ஐயா.. கோவில்ல கூட்டமா இருக்கேன்னு சிலையை வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?
காவலர் : 😠😠
---------------------------------------------------------------
பாலு : நேத்து பஸ்ல போயிக்கிட்டு இருந்தப்போ ஒருத்தர் தோள்பட்டை-ல அடிச்சுட்டு ராயப்பேட்டைன்னு சொன்னாரு...
வேலு : அப்புறம்?
பாலு : நான் இது தோள்பட்டைன்னு சொன்னேன்... எதுக்கு அவரு என்னைய முறைச்சாருன்னு தெரியல?...
வேலு : 😝😝
---------------------------------------------------------------
       பொன்மொழிகள்...!!
---------------------------------------------------------------
👉 எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம்.

👉 போருக்கு செல்லும்போது கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ உண்மையான வீரன் என்றால், உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும்.

👉 நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய்தான் இருக்கும்.

---------------------------------------------------------------
   கதை படிக்கலாம் வாங்க...!!
---------------------------------------------------------------
ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அந்த தோட்டத்திலேயே இருந்ததால் தோட்டக்காரருக்கு நண்பர்களாயின அந்த குரங்குகள்.

தோட்டக்காரர் செய்யும் அனைத்து செயல்களையும் பார்த்து குரங்குகளும் அவற்றை செய்து விளையாடும். ஒருமுறை தோட்டக்காரர் வெளியூருக்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்பொழுது தோட்டக்காரருக்கு ஒரு யோசனை தோன்றியது. தான் ஊருக்கு போகும் காலத்தில் குரங்குகளை தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்ற சொல்லலாமே என்று.

குரங்குகளை அழைத்து விஷயத்தை சொன்னார். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால் அவற்றிற்கு ஒரு சந்தேகம்... 

எந்த செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்? என்று தெரியவில்லை. அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. பெரிய வேராக இருந்துச்சுனா நிறைய தண்ணீர் ஊத்தணும்.

சிறிய வேராக இருந்துச்சுனா கொஞ்சமா ஊத்துங்க என்று கூறிவிட்டு சென்றார். தோட்டக்காரர் வெளியூரிலிருந்து வந்ததும் பெரிய அதிர்ச்சி. அனைத்து செடிகளும் பிடுங்கப்பட்டு, காய்ந்து கிடந்தன.

குரங்குகளிடம் சென்று என்ன நடந்தது? என்று கேட்டார். வேர் பெருசா இருக்கா? சின்னதா இருக்கா? என பாக்குறதுக்காக செடியை பிடுங்கி பார்த்தோம் என குரங்குகள் கூறின. 

நீதி : புத்தி இல்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது புத்தியில்லாத செயல் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக