சனி, 8 ஆகஸ்ட், 2020

இன்றைய கடி... இது சிரிக்க மட்டுமே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
----------------------------------------------------
தீபக் : உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இந்த சோப்பைத்தான் போட்டு குளிக்கிறீங்க போல..
பாபு : அப்படியெல்லாம் இல்லைங்க.. சோப்பு கரைஞ்சதும் புது சோப் வாங்கிக்குவேன்...
தீபக் : 😬😬
----------------------------------------------------
ஆசிரியை : டேய் நான் இங்க நாய் மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன். அங்க லாஸ்ட் பெஞ்ச்ல எங்கடா ஒருத்தன காணோம்?...
மாணவன் : உங்களுக்கு பிஸ்கட் வாங்கிட்டு வரப் போயிருக்கான் மிஸ்...
ஆசிரியை : 😏😏
----------------------------------------------------
இன்றைய கடி...!!
----------------------------------------------------
ஆப்பிரிக்காவுல பிறந்த குழந்தைக்கு பல்லு என்ன கலர்ல இருக்கும் தெரியுமா?
.
.
.
.
ஹா... ஹா... பிறந்த குழந்தைக்கு பல்லே இருக்காதே...😆😆
----------------------------------------------------
இன்றைய தத்துவங்கள்!!
----------------------------------------------------
👉 அவமானம் பார்க்காத குணம் வேண்டும்...

👉 சின்ன வாய்ப்புகளை நிராகரிக்காமல் இருக்க வேண்டும்...

👉 ஏமாற்றங்களை விழுங்க வேண்டும்...

👉 உள்ளத்தில் ஒரு வெறி ஓயாது வீசிக்கொண்டே இருக்க வேண்டும்...

👉 அனைத்திற்கும் மேலாக பொறுமை வேண்டும்...!!
----------------------------------------------------
இது சிரிக்க மட்டுமே...!!
----------------------------------------------------
ரயில்ல தூக்கம் வராத இரண்டுபேர் யார் மனைவிக்கு பாசம் அதிகம்னு? ஒரு போட்டி வெச்சாங்களாம். முதல் நபர் நைட்டு பத்து மணிக்கு நான் ரயில விட்டு இறங்கினாலும் என் பொண்டாட்டி எனக்காக காத்திருப்பா..

என் வீட்டுக்கும், ரயில்வே ஸ்டேஷனுக்கும் 2கி.மீ தூரம்... இது என்ன அதிசயம்?... என் பொண்டாட்டி நான் நைட்டு 2 மணிக்கு நான் ரயில விட்டு இறங்கினாலும் அவ எனக்காக காத்திருப்பா.. என் வீட்டுக்கும், ரயில்வே ஸ்டேஷனுக்கும் 4கி.மீ தூரம்...

இதுல இருந்தே தெரியல... என் பொண்டாட்டிக்கு என் மேல பாசம் அதிகம் என்று சொன்னார்... அப்பர் பெர்த்-ல படுத்திருந்த ஒரு வயதானவர் அட லூசுங்களா நான் என் வீட்டை விட்டு ஓடி வந்து 25 வருஷம் ஆகிருச்சு...

தினமும் என் பொண்டாட்டி நான் திரும்ப வருவேனான்னு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து பாத்துட்டு போறா...

நான் தான் பயந்துக்கிட்டு போகாம இருக்கேன்... நிம்மதியா தூங்க விடுங்கடா... என்று கூறினார் அவர்... அதற்கு பின் இருவரும் அமைதியாகிவிட்டனர்...😬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்