நவகிரகங்களில் கேது செவ்வாய் பகவானைப் போல
செயல்படுவார். இவருக்கு செவ்வாய், குரு, சூரியன், சந்திரன் போன்றவை நன்மை
செய்யும். ஒருவரின் ஜாதகத்தில் கேது தசை ஆளுமை செய்வது 7 ஆண்டுகள். இந்த ஏழு
ஆண்டுகளில் ஞானமார்க்கத்தை காட்டிவிட்டு சென்றுவிடுவார்.
ஒருவரின் ஜாதகத்தில் கேது பலம் பெற்று குரு,
சுக்கிரன் உள்ளிட்ட சுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ,
ஞானம் மற்றும் மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேதுபகவான்.
சுபத்துவம் பெற்ற சனி, குருவுடன் சேரும்போது
ஆன்மிகத்தில் அற்புதத்தை தருவார். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் இவர்களெல்லாம்
கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.
லக்னத்திற்கு 7-ல் கேது இருந்தால் அந்த
ஜாதகக்காரர்கள் எதிலும் போராடி வெற்றி பெறுவார்கள்.
7-ல்
கேது இருந்தால் என்ன பலன்?
👉 பயணங்களில் ஆர்வம்
உடையவர்கள்.
👉 மன அழுத்தம் உடையவர்கள்.
👉 பெரிய நட்பு வட்டம்
கொண்டவர்கள்.
👉 ரகசியமான செயல்பாடுகளை
உடையவர்கள்.
👉 மனநிலையை புரிந்து கொள்வது
கடினம் ஆகும்.
👉 திருமணம் தாமதமாகும்.
👉 முதிர்ச்சியான தோற்றம்
உடையவர்கள்.
👉 வருமான வாய்ப்புகள் அதிகம்
கொண்டவர்கள்.
👉 உறவினர்களிடம் கருத்து
வேறுபாடுகள் ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக