Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 நவம்பர், 2019

டென்ஷன் ஆன டாக்டர்... அப்படி என்னதான் இவர் கேட்டிருப்பார்?... - ரிலாக்ஸ் ப்ளீஸ் !!

சிரிக்கலாம் வாங்க...!!
ராம் : டாக்டர் டென்ஷன் ஆயிட்டாரே... இன்ஸ்பெக்டர் அப்படி என்ன கேட்டாரு?
குமார் : துப்பு துலக்க ஒரு பேஸ்ட் எழுதி கொடுங்கன்னு கேட்டாராம்...
ராம் : 😝😝
-------------------------------------------------------------------------------------------------------
கணவர் : கூட்டுல உப்பு அதிகமா இருக்கு...
மனைவி : உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு போச்சு, காய் நெறயா வாங்க சொன்னா எங்க கேக்கறீங்க.....
கணவர் : 😳😳
-------------------------------------------------------------------------------------------------------

நோயாளி : கஷ்டமா இருக்கு டாக்டர்.
டாக்டர் : எதுக்கு?
நோயாளி : நர்ஸ்-ஐ சிஸ்டர்னு கூப்பிடறது....
டாக்டர் : 😠😠
-------------------------------------------------------------------------------------------------------

வேடிக்கையான வினா விடைகள்..!
👉 பொய் சொல்லும் ஆங்கில மாதம் எது? -🤔

👉 வசதியாய் உள்ள தமிழ் மாதம் எது? - 🤔

👉 ஏழ்மையாக உள்ள தமிழ் மாதம் எது? - 🤔

👉 எந்த மண்ணை சாப்பிடலாம்? - 🤔

பதில்கள் :

😝 ஜூலை.

😝 கார்த்திகை.

😝 ஐப்பசி.

😝 களிமண்.
-------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கடி!!
😋 கொலுசு போட்டா சத்தம் வரும். ஆனா, சத்தம் போட்டா கொலுசு வருமா?

😋 என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியுமா?

😋 இளநீர்லையும் தண்ணி இருக்கு, பூமியிலையும் தண்ணி இருக்கு. அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது, பூமில ஸ்ட்ரா போட்டு உறியவும் முடியாது?

😋 நிக்கிற பஸ்ஸஷுக்கு முன்னாடி ஓடலாம், ஆனா ஓடுற பஸ்ஸஷுக்கு முன்னாடி நிக்கமுடியுமா?
-------------------------------------------------------------------------------------------------------

இது சரி தானே..!!
🌟 வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

🌟 யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.

🌟 நேற்றைய பொழுதும் நிஜமில்லை. நாளைய பொழுதும் நிச்சயமில்லை. இன்றைக்கு மட்டுமே நம் கையில்...

🌟 தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது என செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக