இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உணவுப்பொருட்களின் விலை உயர்வினால் சில்லரை பணவீக்க விகிதம்
அக்டோபர் மாதத்தில் 4.62% ஆக அதிகரித்துள்ளது என்று புதனன்று வெளியிடப்பட்ட அரசு
தரப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்க விகிதம்
செப்டம்பரில் 3.99% ஆக இருந்தது. இது அக்டோபர் 2018-ல் 3.38% ஆகவும் இருந்தது.
நுகர்வோர் உணவு விலை பணவீக்க விகிதம் அக்டோபர் 2019-ல் 7.89% ஆக
அதிகரித்துள்ளது, இது கடந்த மாதத்தில் 5.11% ஆகவே இருந்தது.
மத்திய ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கையை தீர்மானிக்க நுகர்வோர்
விலைக் குறியீட்டு அடிப்படை பணவீக்கத்தையே எடுத்துக் கொள்கிறது.
மத்திய ரிசர்வ் வங்கி சில்லறைப் பணவீக்க விகிதத்தை 4%க்குள்
வைத்திருக்க இலக்குக் கொண்டிருந்தது.
அதே போல் ஊரக பணவீக்க விகிதம் அக்டோபரில் 4.29% ஆக
அதிகரித்துள்ளது, இது கடந்த மாதம் 3.24% ஆக இருந்தது. நகர்ப்புற உணவுப்பணவீக்க
விகிதம் 10.47%க்குத் தாவியது. இது செப்டம்பர் மாதத்தில் 8.76% ஆக இருந்தது.
நகர்ப்புறப் பகுதிகளின் பணவீக்க விகிதம் 5.11% ஆக உள்ளது. இது
செப்டம்பரில் 4.78% ஆக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக