மேன்மை பொருந்திய மேஷராசி
அன்பர்களே...!
இதுவரை
உங்கள் ராசிக்கு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான்
பெயர்ச்சியடைந்து 10ஆம் இடமான ஜீவன ஸ்தானத்திற்கு இனிவரும் இரண்டரை ஆண்டுகள்
சஞ்சாரம் செய்யவுள்ளார். ஜீவன ஸ்தான அதிபதி ஜீவன ஸ்தானத்தில் பலம் பெறுவதால்
தொழில் சார்ந்த முயற்சிகள் சிறப்படையும். கமிஷன் தொடர்பான தொழில்களில் தனவரவு
மேம்படும்.
சனிபகவான்
தான் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம்
பார்வையால் சுக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும்
பார்க்கிறார். சகோதர, சகோதரிகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் மாறி புரிதல்
ஏற்படும். திருமண ஏற்பாடுகளுக்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதன் மூலம் சாதகமான
முடிவுகள் கிடைக்கும்.
பொதுவாழ்வில்
நற்பெயரும், புகழும் மேலோங்கும். செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள்
காலதாமதமாக கிடைக்கும். அலைச்சல்கள் அதிகரித்த போதிலும் ஆதாயம் இருக்கும்.
தாயாரின் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
தங்களது
துறையில் பெரிய முன்னேற்றத்தை காண்பீர்கள். தங்களின் மதி நுட்பத்தை வெளிப்படுத்த
சரியான தருணங்கள் ஏற்படும். சக ஊழியர்களிடம் சற்றே ரகசியங்களை வெளிப்படுத்தாமல்
இருப்பதால் நன்மையை அடைவீர்கள்.
வியாபாரிகளுக்கு :
சுயதொழில்
செய்பவர்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய காலம் இது. தங்களது தொழிலுக்காக
அயல்நாட்டு பயணம் மேற்கொண்டு மேன்மை அடைவீர்கள். எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு
தங்களது தொழிலில் லாபம் பெருகும்.
மாணவர்களுக்கு :
அடிப்படை
கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்களது படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். ஆசிரியர்
பணிக்கு தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக தேர்வு முடிவுகள் வந்து
சேரும்.
பெண்களுக்கு :
புத்திர
பாக்கியம் விரைவில் கைகூடும். கூட்டுத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தங்களது தொழில்
கூட்டாளிகளிடம் சற்று கவனத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.
விவசாயிகளுக்கு :
பூமியில்
இருந்து கிடைக்கக்கூடிய தன, தானிய சம்பத்துக்கள் நல்ல லாபத்தை பெற்றுக்கொடுக்கும்.
கருப்பு நிற தானியங்களின் விளைச்சல் சிறப்பாக இருக்கும். கால்நடைகளுக்கு தக்க
பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் கால்நடைகளின் ஆரோக்கியம் சீரடையும்.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சி
சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூக
பணிகளில் இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்கி புதுவகையான சாதனைகளை படைப்பீர்கள்.
கலைஞர்களுக்கு :
தங்களது
கலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றுவர நேரிடும். தங்களைவிட வயதில் மூத்த
பெரியோர்கள் சபை, சமூகத்தில் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின்
தொடர்பால் புதிய வாய்ப்புகள் கைகூடும்.
வழிபாடு :
மாதந்தோறும்
வரும் அமாவாசை அன்று அவரவர்களின் குலதெய்வத்தை வழிபாடு செய்வதன் மூலம் நன்மைகளை
பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக