சிரிக்கலாம் வாங்க...!!
பாபு : ராமு... இந்த லெட்டர 15 ஜெராக்ஸ் காப்பி எடுத்துக்கிட்டு வா...
ராமு : (ஜெராக்ஸ் மெசின் ரூமுக்கு போயிட்டு வந்து) சார், ஜெராக்ஸ் எடுக்குற பேப்பர் இல்லை, 4 white sheet தான் இருக்கு, பேப்பர் வாங்கணும்.
பாபு : அடடா..... இப்ப அவசரமா வேணுமே, நீ ஒன்னு பண்ணு... white sheet வச்சு 15 copy ஜெராக்ஸ் போட்டுக்கோ, அப்புறம் அந்த பேப்பர வச்சு லெட்டர ஜெராக்ஸ் எடு.
ராமு : சார், ஜெராக்ஸ் போடத்தான் பேப்பர் இல்லை.
பாபு : அதாம்பா, white sheet வச்சு ஜெராக்ஸ் போட்டேன்னா, உனக்கு நிறையா white sheet கிடைச்சிடும், அதை யூஸ் பண்ணிக்கோ...
ராமு : என்னங்க சார் வாழப்பழ கதையா இருக்கு, white sheet ஜெராக்ஸ் போடவா?
பாபு : ஆமா ராமு...
ராமு : போங்கடா நீங்களும்.. உங்க வேலையும்...
பாபு : 😋😋
--------------------------------------------------------------------------------------------------
குமார் : என்னோட நாய் காணாம போயிருச்சு...!
தீபக் : பேப்பர்ல விளம்பரம் கொடுப்பது தானே?
குமார் : என்னோட நாய்க்கு படிக்கத் தெரியாது.
தீபக் : 😝😝
--------------------------------------------------------------------------------------------------
அருண் : இட்லி சாஃப்ட்டா இருக்குமா?
ராம் : சாப்ட்டா இட்லி இருக்காது... வயித்துக்குள்ள போயிடும்...!!
அருண் : 😜😜
--------------------------------------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
இன்பம்... துன்பம்...
ஓரெழுத்து மட்டுமே வித்தியாசம்...
இரண்டுமே நிலையில்லாதது...
இன்பத்தை விரும்புவதும், துன்பத்தை வெறுப்பதும்...
மனிதனின் இயல்பு...
ஒன்று முன்னே வந்தால், மற்றது பின்னே வரும்...
இது இயற்கையின் இயல்பு...
எது வந்தாலும் ஏற்றுக்கொண்டு வாழ்வதே...
இறைவன் நமக்களித்த வாய்ப்பு...
--------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கை...!!
நாம் என்ன செய்கிறோம்? என்பதை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை...
நாம் செய்வது மற்றவர்களுக்கு தொந்தரவு தராத வகையிலும், நம் மனசாட்சிக்கு உறுத்தாத வகையிலும் இருக்க வேண்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக