>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 23 ஏப்ரல், 2020

    வாய்ப்புகளை நழுவவிடாதீர்கள்... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்கலாம் வாங்க...!!

    கணவன் : அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்... பணம் அனுப்ப சொல்லி போன் பண்ணியிருக்காங்க...
    மனைவி : கஞ்சி காச்சி குடிக்க சொல்லுங்க... எல்லாம் சரியாகிடும்...
    கணவன் : இந்தா நீயே உன் அம்மாக்கிட்ட சொல்லிரு...
    மனைவி : 😡
    -------------------------------------------------------------------
    கூட்டத்துல தனியா தெரியணுமா?

    அறிவாளிங்க கூட்டத்துல முட்டாளாகவும்,
    முட்டாளுங்க கூட்டத்துல அறிவாளியாகவும் இருக்கணும்...
    -------------------------------------------------------------------
    வாய்ப்பை நழுவவிடாதீர்கள்...!!

    ஒரு இளைஞன், விவசாயி ஒருவரின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவரிடம் சென்று அனுமதி கேட்டான். அதற்கு அந்த விவசாயி இளைஞனைப் பார்த்து சொன்னார்.

    தம்பி... நீ என் மகளை மணக்க விரும்பினால், நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன். அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும்.

    என் மகளை மணம் முடிக்க சம்மதிக்கிறேன் என்று கூறினார். அதற்கு அந்த இளைஞனும் ஒத்துக்கொண்டான். மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது. முதலில் ஒரு மாடு வந்தது.

    அதை விட பெரிய மாடு வெளியே ஓடி வந்தது.

    பார்க்கவே பயங்கரமான தோற்றம். அவனை முட்டி தள்ளுவதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு இதுவும் வேண்டாம். மூன்றாவதை பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான்.

    ஓடி வந்த மாடு அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடி சென்றது. மூன்றாவது முறையாக கதவு திறக்க, அப்போது வெளியே வந்த மாட்டை பார்த்து இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது.

    அவன் பார்த்ததில் இதுவே மிகவும் பலவீனமான மாடு. எலும்பும், தோலுமாய் பார்ப்பதற்கே பரிதாபமாக ஓட முடியாமல் நடந்து வந்தது. இந்த மாட்டை விடக்கூடாது.

    இதைத்தான் பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் வாலை தொட தயாராக இருந்தான். மாடு அருகில் வந்ததும், ஒரு தாவு தாவி மாட்டின் வாலை தொடப்போனான். ஆனால் அதிர்ச்சி அடைந்தான். ஆம். அந்த மாட்டுக்கு வாலே இல்லை.

    நண்பர்களே... நமது வாழ்க்கையும் இப்படித்தான்...
    அது பல வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது...
    சில வாய்ப்புகள் எளிதாக தோன்றலாம்...
    சில வாய்ப்புகள் கடுமையாக இருக்கலாம்...
    நாம்தான் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக