Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 23 டிசம்பர், 2019

நைட்ல தூக்கம் வரவில்லையா? இதுதான் காரணமாம்...😌 - ரிலாக்ஸ் ப்ளீஸ்..! கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!

குமார் : உங்க மனைவியை செல்லமாக எப்படி கூப்பிடுவீங்க?
பாபு : கூகுள்-னு
குமார் : ஏன்?
பாபு : நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சிருவா...
குமார் : 😂😂
-------------------------------------------------------------------------------------------
மனைவி : ஏன் இப்படி குடிச்சு குடிச்சு.. காசை வீணாக்குறீங்க.
கணவன் : நீ மட்டும் பியூட்டி பார்லர் போயி காசை வீணாக்கலாயா?
மனைவி : நான் உங்க கண்ணுக்கு அழகாத் தெரியனும்னுதானே என்னை அழகு படுத்திக்கிறேன்.
கணவன் : நான் மட்டும் என்ன... நீ என் கண்ணுக்கு அழகா தெரியனும்னுதான் குடிக்கிறேன்.
மனைவி : 😡😡
-------------------------------------------------------------------------------------------
இன்றைய கடி...!!

டெய்லரும், பார்பரும் வெட்டி வெட்டி தான்
சம்பாதிக்குறாங்க, அதுக்காக அவங்க வெட்டி
வேலை செய்யறாங்கனு சொல்ல முடியுமா?
-------------------------------------------------------------------------------------------
விடுகதைகள்..!!
1. கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்?

தண்ணீர்

2. இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. அது என்ன?

மிளகாய்

3. மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து பிடித்திருப்பவர்களைக் காப்பாற்றும் என்னை, இந்த இளம் பெண்கள் அழகுக்காகப் பிடித்துக் கொள்கிறார்கள். நான் யார்?

குடை

4. நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. நான் யார்?

ஆமை

5. கையில்லாமல் நீந்துவான். கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?

படகு
-------------------------------------------------------------------------------------------

என்னம்மா யோசிக்கிறாங்க...?
நைட்ல தூக்கமே வரமாட்டேங்கிது..
ஏன்னு தெரியாம இருந்தேன்..
அப்புறந்தான் தெரிஞ்சுது
உள்ளத்தில நல்ல உள்ளம் உறங்காதாம்..
இது தெரியாம நான் வேற பயந்து போயிட்டேன்.
-------------------------------------------------------------------------------------------

படித்ததில் சிரித்தது !!
ஒருவருடைய மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டி கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதி சடங்கின்போது அதை நடத்தி வைத்தவர் ஒரு விசித்திரமான சம்பவத்தைக் கவனித்தார்.

துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை நெருங்கி வந்து ஏதோ காதில் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டு விட்டு 'ஆமாம்" என்று தலை அசைத்தார். ஆனால் துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கி வந்து ஏதோ சொல்கிறபோது 'இல்லை" என்று தலை அசைத்தார்.

அது தொடர்ந்துக் கொண்டே இருந்தது. இறுதிச் சடங்கெல்லாம் முடிந்த பிறகு அவர் அந்த விவசாயியிடம் வந்து பெண்கள் வந்தால் ஆமாம் என்று தலையாட்டினீர்கள், ஆண்கள் வந்தால் இல்லை என்று தலையாட்டினீர்களே, ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி, பெண்களெல்லாம் வந்து என் மனைவியை பற்றி நல்லவிதமாய் சொன்னார்கள். உங்களது மனைவி 'எவ்வளவு அழகாய் இருந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் குணம் அதிகம்" என்று, அதற்கு ஆமாம் என்று நானும் தலையசைத்தேன்.

சரி ஆண்கள் வந்து கேட்டால் 'இல்லை" என்று தலையசைத்தீர்களே ஏன்? ஓ.. அதுவா அவர்கள் அந்த காளையை விற்பனைக்கு தர முடியுமா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்று சொன்னேன் என்றார்.😌😂

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக