Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 டிசம்பர், 2019

நெற்றிப்பொட்டில் துப்பாக்கி... கணவனின் குமுறல்... அப்படி என்னதான் நடந்துச்சு? சிரிக்க ரெடியா?

குமாஸ்தா : போடா, முட்டாள்!
டைப்பிஸ்ட் : போடா, நீ தான் முட்டாள்!
மேனேஜர் : என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா?
டைப்பிஸ்ட் to குமாஸ்தா : 😂😂
----------------------------------------------------------------------------------------------------------
கணவன் : ச்சீ! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காது.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வெச்சுருக்கேன்.
கணவன் : 😳😳
----------------------------------------------------------------------------------------------------------

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீடுல சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கல...
காதலி : 😩😩
----------------------------------------------------------------------------------------------------------
சிரிக்;க மட்டுமே...!

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினாள். வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலயறையில் அமர்ந்திருந்ததைக் கண்டாள். அவருக்கு முன்னால் மதுபாட்டில் இருந்தது. அவர் ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி மதுவை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டாள். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, 'என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?" என்று கேட்டாள்.

கணவன் : உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு பதினெட்டு வயதாகும்போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி : ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் குமுறலுடன்) : அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி : ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறாள்).

கணவன் : என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து 'மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?... இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?" என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி : அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன் : அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!

மனைவி : 😡😡                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக