>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 30 டிசம்பர், 2019

    மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது?

     Image result for மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது?
    மார்கழி மாதம் நம் உடம்பை திடப்படுத்திக் கொள்ளவும், ஆற்றலைப் பெருக்கி, சேமித்துக் கொள்ளவும், உடலில் சமன்பாட்டைக் கொண்டு வரவும் சாத்தியமான காலம் ஆகும். ஏனெனில் மார்கழி மாதம் மனித உடலின் சக்தி மையம் கீழிலிருந்து மேல்நோக்கி ஈர்க்கப்படுகிறது.

     மார்கழியில் பூமியின் வடபாதியில் புவிஈர்ப்பு விசை குறைவாகவே இருக்கும். இந்நிலையில் விதைவிதைத்தால் அது முளைக்காது. உயிர்சக்தி மந்தமாயிருக்கும்.

     இயற்கைக்கே இந்நிலை என்றால் மனிதனின் நிலை என்னவாகும். ஆதலால்தான் பனிரெண்டு மாதங்களில் வழிபாடுகளுக்கென்றே தனியாக ஒதுக்கப்பட்ட இம்மார்கழி மாதத்தில் நம் முன்னோர்கள் சுபநிகழ்ச்சிகளை நிகழ்த்துவதில்லை. எனினும் அதற்கான முன்னேற்பாடுகளான பெண்பார்த்தல் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

     மார்கழி மாதத்தில் சூரியசக்தி கீழ்நோக்கி செயல்படுவதால் மனநோயாளிகள் தங்கள் மனநிலையை சமநிலைக்கு கொண்டு வருவதற்கு உகந்த நேரமும் இதுதான்.

     நம் உடலை நாம் பாதுகாக்க தவறினால் உடம்பின் நீராதார சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அது மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்காக பிரம்ம முகூர்த்தத்தில் மூழ்கி நீராடினால் உடல் வலிமை பெறும்.

    மார்கழி மாதமானது இயல்பாகவே நமது உடம்பில் ஒரு உறுதியான நிலையையும், மன அமைதியையும் கொடுக்கிறது.

     இந்த மார்கழி மாதம் ஸ்திரமாக(உறுதி) இருப்பதற்கும், அடுத்து வரும் தை மாதம் நகர்ந்து முன்னேறுவதற்கும் பயன்படுகிறது. உடல்நிலை திடமாக இருந்தால்தான் வாழ்க்கையை சுலபமாக பயணிக்கத் துணிவு வரும்.

     மார்கழியை பொறுத்தவரை பருவநிலையில் மாற்றம் ஏற்படும். குறிப்பிட்ட வகை பயிர்கள் அறுவடைக்காக காத்திருக்கும்.


    எனவே இதனை அறுவடைக் காலமாகவும் முன்னோர்கள் கருதினர். இது போன்ற காரணங்களால்தான் திருமணத்தை இந்த மாதத்தில் நடத்தாமல் இருந்தனர் நம் முன்னோர்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக