தண்ணீர் நிறைய குடிப்பது உடலுக்கு
நல்லது என்று தெரியும். ஆனால் போதிய நேரமில்லை, தாகம் எடுக்கவில்லை என ஏதாவது
சாக்கு போக்கு சொல்கிறோம். நம் உடலில் ஏற்படும் நிறைய பிரச்சனைகளுக்கு போதிய அளவு
நீர்ச்சத்து இல்லாமல் இருப்பதுதான் காரணமாகும்.
உடலுக்கு
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்?
என்பதை பற்றி தெரிந்து கொள்வேம்.
தினமும்
கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் அல்லது 8 கப் தண்ணீர் குடிப்பது அவசியம்.
சிலர்
தாகம் எடுக்கும் பொழுதும், சாப்பிட்ட பின்பும் தண்ணீர் குடிப்பதே தன் உடலுக்கு
போதுமானது என்று கருதுகின்றனர். அது அப்படி இல்லை. குறிப்பிட்ட அளவு நிச்சயமாக
எடுத்து வந்தாலே தண்ணீர் குறைபாடு சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க
முடியும்.
வீடு,
அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி என எங்கு இருந்தாலும் தண்ணீர் பாட்டில் நமது
அருகிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஞாபக மறதியால் தண்ணீர் குடிக்காமல்
இருப்பதை தவிர்க்கலாம்.
சாப்பிடுவதற்கு
அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு கப் தண்ணீர் குடிப்பதால், பசி சற்று குறைந்து
காணப்படும். எனவே அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.
அதிகம்
தண்ணீர் குடிப்பதற்கு முன் தண்ணீரின் சுத்தத்தை புரிந்து கொள்வது அவசியம்.
நாம்
தினமும் 8 மணி நேரம் வேலை பார்க்கிறோம் என்று வைத்துக்கொண்டால், வேலையின் நடுவே
ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறையும் தண்ணீர் அருந்துவதை பழக்கமாக வைத்துக்கொள்ள
வேண்டும்.
நாள்
முழுவதும் அடிக்கடி தண்ணீர் அருந்தி கொண்டே இருப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள
வேண்டும். தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு
ஒருமுறை அதிகமாக தண்ணீர் எடுப்பதை வழக்கமாக வைத்துக் கொள்வது நம் உடலின் தண்ணீர்
பற்றாக்குறையை தீர்த்துவிடும்.
காய்கறிகள்
மற்றும் பழங்களில் நீர்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது. அவைகளை சாப்பிடுவதனால்
உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிகரிக்க முடியும்.
காலை
எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது நம் சுவாச புத்துணர்ச்சிக்கு வழிவகுக்கும். இரவு
தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.
தண்ணீர்
குடிப்பது உடல்நலத்தை பாதுகாக்கும் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் நம் அருகில் தண்ணீரை வைத்துக் கொண்டு அடிக்கடி குடித்து
வருவதைப் பழக்கமாக வைத்துக் கொண்டால் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து
கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக