மனைவி
: TV-ல ஜல்லிக்கட்டு பாக்குறீங்களே... அவ்ளோ ஆர்வமா இருந்தா நேர்ல போயி மாட்ட
அடக்க வேண்டியதுதான...
கணவன்
: கட்டுன மாட்டையே அடக்க முடியல... இதுல கட்டாத மாட்ட எப்படி அடக்குறது?
மனைவி
: 😡😡
-------------------------------------------------------------------------------------------------------------
பாபு
: நான் வெளிநாட்டுக்கு போனா நீ என்னம்மா பண்ணுவேன்னு பொண்டாட்டிக்கிட்ட
கேட்டதுக்கு... அவ என்ன சொன்னா தெரியுமா?
ராமு
: என்ன சொன்னாங்க?
பாபு
: ஒரு டம்ளர் அரிசி கம்மியா போடுவேன்னு சொல்றா....
ராமு
: 😂😂
-------------------------------------------------------------------------------------------------------------
மனைவி
: உலகம் பூரா தேடினாலும் என்ன மாதிரி மனைவி உங்களுக்கு கிடைக்க மாட்டா...
கணவன்
: எனக்கென்ன பைத்தியமாடி... மறுபடியும் உன்ன மாதிரியே தேட...
மனைவி
: 😠😠
-------------------------------------------------------------------------------------------------------------
இது எப்படி இருக்கு?
காலங்காத்தால
கோழி மாதிரி எந்திருச்சு...
காக்கா
மாதிரி குளிச்சுட்டு...
குரங்கு
மாதிரி லபக் லபக்னு தின்னுட்டு...
பந்தயக்குதிரை
மாதிரி வேக வேகமா ஆபிஸஷுக்கு ஓடி...
மாடு
மாதிரு உழைச்சு...
பொண்டாட்டி
புள்ளைங்கக்கிட்ட கரடியா கத்தி...
நாயா
குரைச்சு...
பொண்டாட்டி
ஏதாச்சு எக்குத்தப்பா கேட்டா ஆந்தை மாதிரி முழிச்சு...
அப்புறம்
ராத்திரி சாப்பாட்டை முதலை மாதிரி முழுங்கிட்டு...
எருமை
மாடு மாதிரி தூங்க வேண்டியிருக்கிறது...
இதுக்கு
பேசாம வண்டலூருக்கே குடி போயிடலாம்...
-------------------------------------------------------------------------------------------------------------
கடைசி தலைமுறை...!!
1.
செல்போன்ல பட்டன பார்த்த கடைசி தலைமுறை நாம்தான்.
2.
மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம்தான்.
3.
காலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நாம்தான்.
4.
மயில் இறகை நோட்டுக்குள் வைத்து அரிசி போட்டு, அது குட்டி போடும்-னு நம்பின கடைசி
தலைமுறை நாம்தான்.
5.
வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நாம்தான்.
6.
தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி
தலைமுறை நாம்தான்.
7.
கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நாம்தான்.
8.
காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி, பூஜை போட்டு, பயந்து கொண்டே காதலியிடம்
கொடுத்துவிட்டு திரும்பி பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நாம்தான்.
9.
நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நாம்தான்.
10.
மாமா பொண்ணு, அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க சூழ வந்த கடைசி தலைமுறை
நாம்தான்.
11.
ஒளியும் ஒலியும் பார்த்த கடைசி தலைமுறையும், ஒனிடா மண்டையன பார்த்த கடைசி தலைமுறையும்
நாம்தான்.😎😎
-------------------------------------------------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
சிறப்பொடு
பூசனை செல்லாது வானம்
வறக்குமேல்
வானோர்க்கும் ஈண்டு.
பொருள் :
மழை
பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோருக்காக நடைபெறும் திருவிழாவும்
நடைபெறாது, நாள் வழிபாடும் நடைபெறாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக