Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 டிசம்பர், 2019

வங்கியில் கொள்ளையடித்து கிறிஸ்துமஸ் பரிசு வழங்கிய வள்ளல்

கொள்ளைக்கார பேர்வழியின் பெயர் டேவிட் வைன் ஆலிவர் என்றும் அவரது 65 வயதானவர் என்றும் விசாரணையில் தெரிந்தது.

ஹைலைட்ஸ்
  • டேவிட் வைன் ஆலிவர் ஸ்டார்பக்ஸ் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.
  • திருடிய பணத்தை தெருவெல்லாம் வீசிக்கொண்டே கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லியபடி சென்றுள்ளார்.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸுக்கு முன் வங்கியில் கொள்ளையடித்த கிழவர் திருடிய பணத்தை தெருவில் வாரி இறைத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கொலராடோ மாகணத்தில் கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகரில் உள்ள அகாடமி வங்கியில் கடந்த திங்கட்கிழமை கிழவர் ஒருவர் கொள்ளை அடித்திருக்கிறார்.
On December 23, David Oliver was booked into the El Paso County Criminal Justice Center following a bank robbery in… https://t.co/a2pemb2g3s
— Colorado Springs Police (@CSPDPIO) 1577210503000

பட்டப்பகலில் வங்கியில் ஆயுதத்துடன் நுழைந்த அந்தக் கிழட்டு ஆசாமி, வங்கியில் இருந்த அதிகாரிகளை மிரட்டி, கத்தையாகப் பணத்தை அபேஸ் செய்து சென்றுள்ளார். அவர் அள்ளிச்சென்ற பணத்தின் மதிப்பு இதுவரை தெரியவரவில்லை.

கொள்ளை அடித்துவிட்டு போகும்போது அந்த ஆசாமி, திருடிய பணத்தை தெருவெல்லாம் வீசிக்கொண்டே கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லியபடி சென்றுள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளைக்கார பேர்வழியின் பெயர் டேவிட் வைன் ஆலிவர் என்றும் அவரது 65 வயதானவர் என்றும் தெரிந்துள்ளது. சிறிது நேரத்தில் ஸ்டார்பக்ஸ் என்ற இடத்தில் அவரைக் கைது செய்துள்ளனர்.

ஆலிவர் சாலையில் வாரி இறைத்த பணத்தை சிலர் வங்கியில் ஒப்படைத்துள்ளனர். ஆனால், இன்னும் அதிக அளவு பணம் திரும்பவில்லை என ஒரு வங்கி அதிகாரி கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக