பெரும்பாலான வீடுகளில் துணிகள் வைக்கும்
அலமாரிகளை ஒரு குடோன் போல் வைத்திருப்பார்கள். அலமாரியின் கதவை திறந்த உடனேயே நம்
தலையில் துணிகள் மற்றும் வைத்திருக்கும் பொருட்களானது விழுவதுபோல் இருக்கும்.
அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும்
வைத்துக்கொள்வது எப்படி? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
துணி வைக்கும் அலமாரியில் நம்முடைய
துணிகளை வகைப்படுத்தி அடுக்க வேண்டும். தினசரி உபயோகிக்கும் துணிகள் ஒரு
ரேக்கிலும், அயர்ன் செய்த துணிகளை தனியாகவும் வைத்து விட்டால் துணிகளை எங்கே
வைத்தோம் என்று தேட வேண்டிய அவசியமே இருக்காது.
உள்ளாடைகள், கைக்குட்டைகள், சாக்ஸ்கள்
போன்றவற்றிற்கு தனியாக ஒரு ரேக்கை பயன்படுத்த வேண்டும்.
மாதம் ஒரு முறையாவது அலமாரியை சுத்தம்
செய்து பின்னர் அடுக்குவது சிறந்தது.
மேல் அலமாரியில் துணியையோ, பொருட்களையோ
தனித்தனியாக அடுக்கினால் அவற்றை எடுப்பது சிரமமாக இருக்கும். எனவே பெட்டியில்
போட்டு அவற்றை மேல் அலமாரியில் வைத்து விட்டால் அவற்றை எடுப்பது எளிதாக இருக்கும்.
ஹேங்கரில் துணிகளை தொங்கவிடும்போது
நீளமான துணிகளை இடது புறமும், குட்டையான துணிகளை வலது புறமும் தொங்கவிட்டால்
எளிதாக எடுக்க முடியும்.
ஸ்வெட்டர்கள், ஜீன்ஸ்கள் போன்றவற்றை
மடித்து வைத்து உபயோகிக்கும் பொழுது அவை சுருக்கம் ஏற்படாமலும், வடிவம் மாறாமலும்
இருக்கும்.
அடிக்கடி உபயோகிக்கும் துணிகளை நம்
கண்களுக்குத் தெரியும் உயரத்தில் மற்றும் எடுக்க வசதியாக உள்ள அலமாரி ரேக்குகளில்
வைக்க வேண்டும்.
ரேக்குகளில் தடுப்புகளை ஏற்படுத்தி
அதில் உள்ளாடைகள், சாக்ஸ், டை மற்றும் கைக்குட்டைகளை தனித்தனியாக அடுக்கிக்
கொள்வதால் துணிகளைத் தேடி எடுக்க வேண்டிய பதற்றம் இருக்காது.
அலமாரியில் உள்ள தேவையற்ற பொருட்கள்
மற்றும் துணிகளை அடிக்கடி அப்புறப்படுத்தி அலமாரியை சுத்தமாக வைக்க வேண்டும்.
மிகவும் அவசரமாகவும், பதற்றமாகவும்
உள்ள நேரங்களில் அலமாரியை திறந்து அதில் நாம் தேடும் பொருள் கிடைக்கவில்லை என்றால்
இன்னும் எரிச்சலும், கோபமும் வரும்.
எனவே, இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க
மட்டுமல்லாமல், சுத்தமாக வைத்துக்கொள்வது நம்முடைய கடமை என்பதை கருத்தில் கொண்டு
அனைத்து பொருட்களையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக