Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 1 பிப்ரவரி, 2020

கெட்டிக்கார பையன்... குட்டிக்கதை... - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!


சிரிக்கலாம் வாங்க...!!

நோயாளி : டாக்டர்... நான் அஞ்சுதடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டேன்...
டாக்டர் : 1-ளவ தடவையே என்னை வந்து பாத்திருந்தா.. இந்த பிரச்சனையே வந்திருக்காதில்ல..?
நோயாளி : 😑😑
-------------------------------------------------------------------------------------------------------
கணவன் : ஏன்டி எப்ப பாத்தாலும் கோபமா எரிஞ்சு விழுற?
மனைவி : நீங்க தானே சொன்னீங்க.!
கணவன் : என்ன சொன்னேன்?
மனைவி : கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!
கணவன் : 😩😩
-------------------------------------------------------------------------------------------------------
கெட்டிக்கார பையன்...!!
தன் மகனை அழைத்த தந்தை 'நாம் இருவரும் இனிமேல் தவறு செய்யக்கூடாது". நம்மில் யார் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும்.

அப்படி சேரும் தொகையை கோவிலுக்கு தந்துவிட வேண்டும் என்றார் தந்தை. மகனும் அதை ஒப்புக்கொண்டான். அவரின் திட்டம் அப்படியே நடந்தது.

திடீரென்று அவரின் உடல்நிலை சரியில்லாமல் போனது. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் கோவிலுக்கு தந்துவிட்டு தந்தை மருத்துவமனையில் சேர்ந்தார். மகனைப் பார்த்து நான் இல்லாத போதும் நீ இந்த பழக்கத்தை விட்டுவிடாதே.

ஒரு தவறுக்கு ஒரு ரூபாயை உண்டியலில் போட்டுவிடு என்றார். மருத்துவமனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பியவுடன் உண்டியலை திறந்து பார்த்தார்.

அதில் ஒரே ஒரு ரூபாய்தான் இருந்தது. மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார். 'இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?" என்று கேட்டார்.

இல்லை அப்பா..! உண்டியலில் 300 ரூபாய் பணம் சேர்ந்தது என்றான் அவன். அந்த பணத்தை கோவிலுக்கு தந்துவிட்டாயா? என்று கேட்டார் அவர். இல்லை அப்பா.. உண்டியலை திறந்து அந்த பணத்தை நானே எடுத்துக்கொண்டேன்.

அந்த தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன் என்றான் அந்த கெட்டிக்கார பையன்.
-------------------------------------------------------------------------------------------------------

இது எப்படி இருக்கு?
ஏழு பரம்பரைக்கு உக்காந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து இருந்தாலும் பாஸ்ட் புட்க்கு போனா நின்னுக்கிட்டுதான் சாப்பிடணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக