Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 1 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 71


  திருமாலிடம் ஆசிப் பெற்ற மாய வித்தகர்கள் அவரிடம் விடைப்பெற்று சென்று திரிபுர பட்டணங்களுக்கு அருகில் தங்களது வித்தைகளை பிரயோகப்படுத்தி பரிசித்துக் கொண்டிருந்தனர்.

அதனைக் கண்ட அசுரர்கள் இந்த விசித்திர கலையை தாமும் பயில வேண்டி, அவர்கள் பின்பற்றும் மதத்தில் இணைந்து போதனை பெற தொடங்கினார்கள். மாயாவிகளின் வலைகளில் சிக்கியவர்கள் தங்களது சுய அறிவினை இழந்து அவர்கள் சொன்ன வழியில் தங்களது பயணத்தை மேற்கொண்டனர். காலங்கள் நகர இம்மாயாவிகளின் புகழும் இம்மதத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கின.

திருமாலை காண நாரதர் சென்ற போது அசுரர்களின் செயல்பாடுகளும், அதற்கான அழிவும் அதிகரித்துக் கொண்டே போகின்றன என கூறிக்கொண்டு இருந்த வேலையில், மாய வித்தகர்களின் குருவும், அவரின் சிஷ்யர்களும் திருமாலை காண வந்தார்கள்.

திருமால் இவர்களை கண்டதும் நாரதரிடம் இவர்கள் அனைவரும் என்னால் உருவாக்கப்பட்டவர்கள். தாரகாசுரனின் மைந்தர்களால் ஏற்பட்ட இன்னல்களை களையவும், அவர்கள் செய்து வரும் சிவபூஜையை தடுத்து அவர்களை அழிவு பாதைக்கு அழைத்து செல்லக்கூடியவர்கள் இவர்கள்தான்.

ஆகவே, இவர்களுடன் இணைந்து இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவாயாக என்று கூறினார் திருமால். திருமாலிடம் நாரதர் மற்றும் மாய வித்தகர்கள் அனைவரும் ஆசிப்பெற்று ஐவர் அறுவராக திரிபுர பட்டணங்களுக்கு புறப்பட்டனர்.

நாரதர் திரிபுர பட்டணங்களில் முதலில் வித்யுமாலியின் பட்டணத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் அனைவரும் பட்டணத்தில் இருந்த வேந்தரின் அரண்மனையை அடைந்ததும், மூன்று லோகத்திற்கு எவ்விதமான தடையுமின்றி செல்லக்கூடிய தேவ முனிவரான நாரதரை கண்டதும் அவரை வரவேற்று உபசரித்தார் வித்யுமாலி.

எந்தவிதமான செயலும் இன்றி தாங்கள் இவ்வளவு தூரம் என்னுடைய பட்டணத்தை அடைந்த காரணத்தை நான் அறியலாமா? ஏனென்றால் காரியம் இன்றி தாங்கள் எதுவும் செய்ய மாட்டீர்களே என்பதை நான் அறிவேன் என்றார் வித்யுமாலி.

வித்யுமாலி நாரதரிடம் காரியமின்றி தாங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன் என்று கூறினார். அதற்கு நாரதர் காரியம் எதுவும் இல்லை வித்யுமாலி. நான் இவ்வழியாக சென்று கொண்டிருந்த போது இந்த பண்டிதர்களை சந்தித்தேன்.

இவர்கள் பகவத் சார்ந்த மதத்தின் கருத்துக்களை உங்களது பட்டணத்தில் பிரச்சாரம் செய்வதற்காக என்னிடம் உன்னுடைய பட்டணத்திற்கு வருவதற்கான வழியை கேட்டு யாசித்து நின்றனர்.

சரி நாம் போகும் வழியில் தானே உள்ளது என இங்கே அழைத்து வந்தேன் என்றார் நாரதர். நாரதர் கூறியதும் அவருடன் வந்த பண்டிதர்களை (மாய வித்தகர்கள்) அழைத்து வரவேற்று உபசரித்தான் வித்யுமாலி.

வேந்தரே இந்த பண்டிதர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. இவர்களை காண்பது என்பது மிகவும் அரிதாகும். இவர்கள் இறைவன் மீது சிறந்த பக்தியை கொண்டவர்கள் என்று அங்கு வந்த பண்டிதர்களை பற்றி மிகவும் உயர்வாக கூறினார் நாரதர்.

நாரதர் எப்போதும் போல தம் பணியை இனிதே செய்ய தொடங்கினார். அதாவது, இவர்களுக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை. இவர்களை பற்றி அறிந்த நான் அந்த கணமே இவர்களிடம் சிஷ்யனாக சேர்ந்து உபதேசம் பெற்றுக் கொண்டேன் என்றும், நீயும் இவர்களிடம் உபதேசம் பெற்றுக்கொண்டால் உன்னுடைய புகழும், ஆட்சியும் மேலும் அபிவிருத்தியடையும் என்று கூறினார்.

செய்த கர்ம வினையானது செயல்பட தொடங்கிய காரணத்தால் தேவ முனிவரான நாரதர் கூறிய கூற்றில் இருந்த உண்மையை உணர முடியாமல் பேராசை கொண்டு எதையும் சிந்திக்க இயலாமல் அங்கு வந்த மாய கலைகளில் வித்தகர்களான பண்டிதர்களிடம் உபதேசம் பெற வேண்டி நின்றான் வித்யுமாலி.

அதாவது, வித்யுமாலி பட்டணத்தை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள மக்கள் மற்றும் எதுவும் அறியா உயிரினங்களை கொன்று, அதனால் ஏற்பட்ட பாவ கர்மாக்களால் நிகழ்வது என்னவென்று அறியாவண்ணம் அறிவுக்கூர்மையை இழந்தான்.

மேலும், மாய கலைகளில் வித்தகர்களான ஐவருடன் ஜேஷ்டா தேவியும் திருமாலின் ஆணையினால் ஆயசபுரியினுள் (இரும்பினால் செய்யப்பட்ட பட்டணம்) நுழைந்தார்கள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக