>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 31 ஜனவரி, 2020

    படிக்க படிக்க சிரிப்பு... அப்படி என்னதான் இருக்கு இதுல?... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    சிரிக்கலாம் வாங்க...!!

    பெண் : இலையை மடிக்க வேண்டாம்.
    விருந்தினர் : ஏன் மடிக்க வேண்டான்னு சொல்றீங்க?
    பெண் : அடுத்து வர்றவங்க சாப்பிடத்தான்.
    விருந்தினர் : ஐய்யோ! அவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா?
    பெண் : இப்போ நீங்க கோவிச்சுக்கிட்டீங்களா! என்ன?
    விருந்தினர் : 😩😩
    ------------------------------------------------------------------------------------------------------
    மனைவி : உங்களுக்கு ஞாபகம் இருக்கா?... நீங்க எங்கிட்ட முதன் முதல்ல ஐ லவ் யூ சொன்னப்ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே இருந்தேன்.
    கணவன் : பின்ன ஞாபகம் இருக்காதா... அந்த 1 மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே நான் மகிழ்ச்சியா இருந்த நேரம்.
    மனைவி : 😠😠
    ------------------------------------------------------------------------------------------------------
    ராதா : நேத்து உன் லவ்வரை பாக்க போறதா சொன்னியே! என்ன ஆச்சு?
    கீதா : அட! அத ஏன்டி கேக்குற? வாத்தியாரை லவ் பண்ணது தப்பா போச்சு!
    ராதா : ஏன்! என்ன ஆச்சு?
    கீதா : கொஞ்ச நேரம் லேட்டா போனேன். அதுக்காக பார்க் டீநnஉh மேலயே ஏறி நிக்க சொல்லிட்டாருடி!
    ராதா : 😂😂
    ------------------------------------------------------------------------------------------------------
    நல்ல வாழ்க்கை...!!
    பிறரை கெடுத்து வாழ்வதை விட,
    பலருக்கு கொடுத்து வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும்...
    கொடுப்பதற்குரியது பணம் மட்டுமல்ல...
    உன் வார்த்தையும் ஒருவனுக்கு தாகம் தணிக்கலாம்...
    உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில் விளக்கேற்றலாம்...
    உன் அன்பு ஒருவனை மனிதனாக வாழ வைக்கலாம்.
    ------------------------------------------------------------------------------------------------------
    விடுகதைகள்...!!
    1. இறக்கையை விட மென்மையானது, ஆனால் உலகின் பலமிக்க மனிதராலும் சில நிமிடங்கள் பிடித்து வைத்திருக்க முடியாது. அது என்ன?
    2. சில இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும், அதை வாசித்தால் அதன் அர்த்தம் முறிந்துவிடும். அது என்ன?
    3. கண் உண்டு, ஆனால் பார்க்க முடியாது. அது என்ன?

    விடைகள் :

    1. மூச்சு.

    2. அமைதி.

    3. ஊசி.
    ------------------------------------------------------------------------------------------------------
    புரிதல்...!!
    புரிதல் இல்லாத வாழ்வும்,
    புரிதல் இல்லாத நட்பும்,
    புரிதல் இல்லாத உறவும்,
    புரிதல் இல்லாத அறிவும்,
    நிலைபெறுவதில்லை...
    புரிதலே நன்று...
    அறிவை பயன்படுத்தினாலே புரிதலை பெறமுடியும்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக