வெள்ளி, 24 ஜனவரி, 2020

சாப்பாட்டு பந்தியில


சிரிக்கலாம் வாங்க...!!

ராமு : உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பாத்தமாதிரி இருக்கே...
சோமு : சாப்பாட்டை வாய்க்குள் திணித்துக் கொண்டே அட, நீங்க ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக்கிட்டு இருந்தபோது உங்க எதிர்ல உக்காந்து சாப்பிட்டேனே நான்தான் அது...
ராமு : ஏங்க..! நீங்க மொய் வைக்கல...
சோமு : அட போங்க தம்பி! மாப்பிள்ளை பையன் எனக்கு பத்திரிக்கையே வைக்கல... நான் ஏன் அவனுக்கு மொய் வைக்கணும்?
ராமு : அட... பாவி பயலே ஓசில சாப்பிட வந்தவனாடா நீ..
சோமு : 😝😝
----------------------------------------------------------------------------------------------------------
டாக்டர் : உங்க கணவர் உங்கக்கிட்ட பயங்கரமா நடிப்பாரு போலிருக்கே?
அமலா : எப்படி சொல்றீங்க?
டாக்டர் : ழிநn hநயசவ ளரசபநசல பண்ணும்போது, இதயத்துல இருக்குற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!
அமலா : 😳😳
----------------------------------------------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

பொருள் :

நடுநிலைமை உடையவர், நடுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்களுக்கு பின் எஞ்சி நிற்கும் புகழாலும், பழியாலும் காணப்படும்.
----------------------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
ஒருவன் எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருந்தான். அவனை பார்த்துக் கொண்டே இருந்தவன், நீ எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருக்கிறாயே எதற்கு? என்று கேட்டான். அதற்கு அவன் குளிர் காய்வதற்கு என்று கூறினான்.

கேட்டவனோ... நீ குளிர் காய்வதை நான் பார்த்ததே இல்லை என்றான். அதற்கு அவனோ சுள்ளி பொறுக்கவே நேரம் கிடைக்கவில்லை... இதில் குளிர் காய எங்கே நேரம்? என்றான்.

நாட்டில் பெரும்பாலானோர் இப்படிதான் இருக்கிறார்கள். பணம் சம்பாதிப்பது வாழ்க்கையை சுகமாக அனுபவிக்கதான். ஆனால், சிலர் பணம் சம்பாதிப்பதையே தங்கள் குறிக்கோளாக வைத்திருக்கின்றனர். குடும்பத்திற்காக சம்பாதிக்கிறேன் என்று, அவர்கள் குடும்ப வாழ்வை அனுபவிப்பதே இல்லை. மனைவியிடமோ, குழந்தைகளிடமோ உறவாடி மகிழ நேரமில்லை என்கிறார்கள்.

எவனொருவன் தூங்க வேண்டிய நேரத்தில் எந்த கவலையும் இல்லாமல் ஆனந்தமாக தூங்குகின்றானோ, அவன்தான் உண்மையான பணக்காரன்.

அளவோடு உழைத்து, வாழ்க்கையை ஆனந்தமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.
----------------------------------------------------------------------------------------------------------

விடுகதைகள்...!!
1. ஆகாரமாக எதை தந்தாலும் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?

2. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது. அது என்ன?

3. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது. அது என்ன?

விடைகள் :

1. நெருப்பு
2. சவப்பெட்டி
3. குயில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்