------------------------------------------------------------------
கலக்கலான காமெடிகள்...!!
------------------------------------------------------------------
நீதிபதி : ஒரு மாசமா ஜெயில்ல இருந்தியே... என்ன கத்துக்கிட்ட...?
குற்றவாளி : சுவரை தாண்டுறது, சுரங்கம் தோண்டுறது.. கம்பிய வளைக்கிறதுன்னு இப்படி நிறைய கத்துக்கிட்டேன் சார்...
நீதிபதி : 😏😏
------------------------------------------------------------------
மனைவி : இன்னைக்கும் குடிச்சுட்டு வந்தீங்களா?
கணவன் : இல்லையே ஏன்?
மனைவி : அப்புறம் ஏன் சூட்கேஸை எடுத்து வெச்சு, டைப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?
கணவன் : 😂😂
------------------------------------------------------------------
குட்டி கதை...!!
------------------------------------------------------------------
அரசர் ஒருவர் தன் நாட்டிற்கு முதலமைச்சர் ஒருவரை தேர்ந்தெடுக்க நினைத்தார். சம தகுதி பெற்ற நான்கு பேர் அவரது அமைச்சரவையில் இருந்ததால் ஏதாவது ஒரு பரீட்சை வைத்து அந்த நால்வரில் ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க முடிவெடுத்தார்.
ஒருநாள் அந்த நால்வரையும் அழைத்து, என்னிடம் ஒரு பூட்டு இருக்கிறது. கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட இந்த விஞ்ஞான பூட்டை திறக்க நாளை காலை உங்கள் நால்வருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
யார் இந்த பூட்டை குறைவான நேரத்தில் திறக்கிறாரோ? அவரே இந்த நாட்டின் முதலமைச்சர் என்று அறிவித்தார். முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் அன்றிரவு முழுவதும் விடிய விடிய பூட்டை பற்றிய ஓலைச்சுவடிகளையும், கணிதம் பற்றிய அனைத்து குறிப்புகளையும் அவர்கள் தேடினார்கள்.
எதுவும் கிடைக்கவில்லை. நால்வரில் ஒருவர் மட்டும் ஒருசில ஓலைச்சுவடிகளை புரட்டி பார்த்துவிட்டு தூங்க போய்விட்டார். மறுநாள் அரசவையில் கணித தந்திரத்தால் மட்டுமே திறக்கக்கூடிய பூட்டை, அரசரின் சேவகர்கள் தூக்கிக்கொண்டு வந்து நால்வரின் முன்பும் வைத்தார்கள். எதிரில் அரசர் வீற்றிருந்தார்.
பூட்டின் பிரம்மாண்டம் எல்லோரின் படப்படப்பையும் இன்னும் அதிகரித்ததோடு, எடுத்து வந்த ஓலைச்சுவடிகளை அவர்கள் முன்னும், பின்னும் புரட்டி பார்த்தார்கள். ஆனால் கணித பூட்டை திறக்கும் வழி மட்டும் அவர்களுக்கு புலப்படவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டார்கள்.
இரவில் நன்றாக தூங்கி எழுந்த அந்த அமைச்சர் கடைசியாக எழுந்து வந்தார். அவர் பூட்டின் அருகில் வந்து பூட்டை நன்றாக பார்த்துவிட்டு, என்ன ஆச்சரியம்...? பூட்டு பூட்டப்படவே இல்லை என்று கூறி பூட்டை திறந்தார் அவர். அதனால் அவரையே முதலமைச்சராக்கினார் அரசர்.
பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்றால் முதலில் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மனதில் பதற்றம் இல்லாமல் சம நிலையில் இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக