தற்போது நாம் அனைவரும் மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் அல்லது மனச்சோர்வில் இருக்கிறோம். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், இப்போதெல்லாம் நிறைய பேர் கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மட்டுமே உங்களுக்கு உதவும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. இந்தியாவின் பல வீடுகளிலும் புனித செடியாக வளர்க்கப்படும் துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
துளசி பல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது. அதற்கு துளசியை வெறுமனே வாயில் போட்டு மென்று சாப்பிடுவதைத் தவிர, பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, அதன் மருத்துவ பண்புகள் அதிகரித்து, உடல் ஆரோக்கியம் பல வழிகளில் மேம்படும். துளசியை எப்படி பாலுடன் சேர்த்து உட்கொள்வது என்பது நீங்கள் கேட்கலாம். கீழே துளசி பாலை எப்படி தயாரிப்பது, எப்போது குடிப்பது நல்லது, துளசி பாலைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
துளசி பால் தயாரிக்கும் முறை:
ஒரு டம்ளர் துளசி பாலில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியிருக்கிறது. இப்போது துளசிப் பாலை எப்படி எளிய முறையில் தயாரிப்பது என்று காண்போம்.
* 4-5 துளசி இலைகளை எடுத்து நீரில் நன்கு அலசிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் துளசி இலைகளைப் போட்டு, மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியில் அந்த பாலை வடிகட்டி, வேண்டுமானால் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
துளசி பாலை எப்போது குடிப்பது நல்லது?
துளசி பாலில் உள்ள முழு சத்துக்களையும் பெற, அதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் அதன் முழு நன்மைகளையும் எளிதில் பெறலாம்.
துளசி பாலின் நன்மைகள்:
இதய ஆரோக்கியம் மேம்படும்:
துளசியில் யூஜெனோல் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், சிறப்பாக செயல்படவும் செய்கிறது. மேலும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்துகிறது. அதோடு, பால் சிக்கலைத் தடுத்து இதயத்திற்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்
துளசியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கின்றன. அத்தகைய துளசி பாலுடன் இணைந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலுப்பெறுவதோடு, பருவக்கால சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராட உதவுகிறது. துளசி மற்றும் பால் இரண்டுமே குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. இதனால் ஒரு டம்ளர் துளசி பாலைக் குடித்த பிறகு, நீங்கள் சற்று நன்றாக இருப்பதை உணர்வீர்கள்.
சுவாச பிரச்சனைகளை சரிசெய்யும்:
பால் மற்றும் துளசி கலவை சுவாச மண்டலத்திற்கு மிகவும் சிறப்பானது. இது தொண்டையை சுத்தம் செய்வதோடு, இருமல், தொண்டைப் புண், சாதாரண சளி போன்றவற்றை சரிசெய்து, சுவாச மண்டலத்தில் உள்ள அடைப்புக்களை நீக்கும். ஆஸ்துமா நோயாளிகள் தினமும் ஒரு டம்ளர் துளசி பால் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.
மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கும்.
நாள் முழுவதும் ஓய்வின்றி உழைத்த பிறகு, மூளைக்கு ஓய்வு கிடைக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்நேரத்தில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான துளசி பாலைக் குடிப்பது, நன்றாக உணர வைக்கும். மேலும் இது நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் அடையச் செய்து, கார்டிசோல் அளவைக் குறைத்து மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கிறது.
தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை சரிசெய்யும்
தலைவலியால் அவஸ்தைப்படுபவரா? அப்படியானால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான துளசி பால் குடியுங்கள். இதனால் தலைவலி மெதுவாக குறைவதைக் காணலாம். அதோடு, இந்த பால் ஒற்றைத் தலைவலியில் இருந்தும் விடுபட உதவும். இதற்கு துளசி பாலில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான் முக்கிய காரணம்.
புற்றுநோயைத் தடுக்கும்.
துளசி மற்றும் பாலில் அத்தியாவசிய சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய்க்கான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவும். ஆகவே ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாகவும், பாதுகாப்புடனும் இருக்க தினமும் ஒரு டம்ளர் துளசி பால் குடியுங்கள்.
சிறுநீரக கற்கள் கரையும்
துளசி பாலில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளது. இது உடலில் உள்ள யூரிக் அமில அளவைக் குறைக்கும். அதோடு சிறுநீரகத்தில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது. இது படிப்படியாக சிறுநீரக கற்களைக் கரைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக